புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்திவிட்டோம்: பிரித்தானிய பிரதமர் ரிஷி வெளியிட்டுள்ள 15 விநாடி வீடியோ
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் எண்ணம் முழுவதும், பிரித்தானிய மக்களின் கவனத்தை ஈர்ப்பதிலேயே உள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மக்களிடம் இழந்த நற்பெயரை, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், எப்படியாவது திரும்பப் பெற போராடிவருகிறார் அவர்.
அவ்வகையில், மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், 15 விநாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரிஷி.
அந்த வீடியோவில் என்ன உள்ளது?
ரிஷி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானிய அரசு மேற்கொண்டுவரும் மூன்று விடயங்கள் உள்ளன.
ஒரு காகிதத்தில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவுக்கு அழைத்து வருதல், என்று அச்சிடப்பட்டுள்ளது. அதன் கீழ் ரிஷி, ’STOPPED’ என்று அச்சிடப்பட்டுள்ள முத்திரையைப் பதிக்கிறார். அதேபோல, அடுத்த காகிதத்தில், முதியோர்களை கவனித்துக்கொள்ளும் வெளிநாட்டு பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வருதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது காகிதத்தில், பிரித்தானிய பணியாளர்களின் வேலைகள் புலம்பெயர்வோரால் பாதிக்கப்படுதல் என குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த காகிதங்களிலும் ரிஷி ’STOPPED’ என்று அச்சிடப்பட்டுள்ள முத்திரையைப் பதிக்கிறார்.
We’ve taken action to reduce migration.
— Rishi Sunak (@RishiSunak) May 15, 2024
Student dependant applications are now down by 80%. pic.twitter.com/x5dWiUK1F4
அந்த வீடியோ எதைக் காட்டுகிறது?
அதாவது, தான் சொன்னபடி புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்திவிட்டதற்கான ஆதாரத்தைக் காட்டுகிறார் ரிஷி. வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதையும், முதியோர்களை கவனித்துக்கொள்ளும் வெளிநாட்டு பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதையும், பிரித்தானிய பணியாளர்களின் வேலைகள் புலம்பெயர்வோருக்குச் செல்வதையும் தான் தடுத்து நிறுத்திவிட்டதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார் ரிஷி.
மேலும், பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் உறவினர்கள் அவர்களுடன் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள், அரசின் நடவடிக்கைகளால், தற்போது 80 சதவிகிதம் அளவுக்கு குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் ரிஷி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |