ரஷ்யாவிடமிருந்து எங்களுக்கு இது தான் தேவை! ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி
உக்ரைன் மீதான பதட்டங்களைத் தணிக்க, துருப்புக்களை திரும்பப் பெறுதல் போன்ற உறுதியான நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுக்க வேண்டும் என்று ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Annalena Baerbock கூறினார்.
உக்ரைன் அருகே பயிற்சியைத் தொடர்ந்து சில துருப்புக்கள் முகாமிற்கு திரும்பி வருவதாக ரஷ்யா அறிவித்தது.
இதனையடுத்து ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சருடன் செய்தியாளர்களை சந்தித்த Annalena Baerbock, பதட்டங்களைத் தணிப்பதற்கான ஒவ்வொரு உண்மையான நடவடிக்கையும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இப்போது ரஷ்யா பதட்டங்களைத் தணிக்கும் நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் மற்றும் துருப்புகளை திரும்பப் பெறுதல் போன்ற மிகவும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அதை ஆதரிக்க வேண்டும் என Baerbock கூறினார்.
இதனிடையே, ரஷ்ய துருப்புகளை ஓரளவு திரும்பப் பெறுவது நற்செய்தி, அடுத்த கட்ட நடவடிக்கையையும் ரஷ்யா தான் மேற்கொள்ள வேண்டும் என ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் எடுக்க வேண்டிய Jose Manuel Albares கூறினார்.