பாஜக எம்எல்ஏ காரில் EVM இயந்திரத்தை ஏற்றி அனுப்பியதே நாங்கள் தான்! தேர்தல் ஆணையம் அளித்த விசித்திரமான விளக்கத்தால் கடுப்பில் மக்கள்
அசாமில் நேற்று இரவு பாஜக எம்எல்ஏ காரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
நேற்று இரவு அசாமின் Patharkandi Vidhan Sabha-விலிருந்து வாக்களிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச்சென்ற பாஜக எம்எல்ஏ கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமான காரை வழிமறித்த மக்கள், அதை வீடியோவாக பதிவு செய்து இணைத்தில் வெளியிட்டனர்.
குறித்த சமப்வம் அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி வாக்களிக்கப்பட்ட EVM இயந்திரம் எம்எல்ஏ காரில் இருந்தது என பல கேள்விகள் சந்தேகங்கள் எழுந்தன.
இந்நிலையில், வீடியோவில் காண்பிக்கப்படும் வெள்ளை நிற கார் தேர்தல் ஆணையத்திற்கு சொந்தமானதில்லை என தேர்தல் ஆணைய வட்டாரத்தை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இயந்திரத்தை கொண்டு சென்ற தேர்தல் ஆணையத்திற்கு சொந்தமான கார் பாதி வழியில் கோளாறனதாகவும், எனவே அதிகாரிகள் அவ்வழியாக வந்த காரில் லிப்ட் கேட்டு EVM இயந்திரத்தை எடுத்துச்சென்றதாகவும், பின்னரே அந்த கார் பாஜக எம்எல்ஏ-வுக்கு சொந்தமானது என தெரியவந்ததாக சம்பவம் குறித்து தேர்தல் ஆணைய வட்டாரத்தை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், EVM இயந்திரத்தை எடுத்துச்சென்ற எம்எல்ஏ-வுக்கு சொந்தமான காரை வழிமறித்து வீடியோ எடுத்த அடையாம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதில் EVM இயந்திரத்திற்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை, தற்போது அது தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாட்டில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வாக்களிக்கப்பட்ட EVM இயந்திரத்தை எடுத்துச்செல்ல பல நெறிமுறைகள் இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள இந்த விளக்கம் இந்திய மக்களை முட்டாளுக்கும் விதத்தில் இருப்பதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.
