தலைமுறையையே ஊக்கப்படுத்தியதற்கு நன்றி...விராட் கோலிக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய ஹாங்காங் அணி
பல நம்பமுடியாத நாட்கள் வர உள்ளது என்று எழுதப்பட்ட ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கியது ஹாங்காங் அணி.
இந்த பரிசு உண்மையிலேயே அடக்கமானது மற்றும் மிகவும் இனிமையானது என கோலி கருத்து.
ஒற்றை தலைமுறையையே ஊக்கப்படுத்தியதற்கு நன்றி என்ற வாசகங்கள் அடங்கிய ஜெர்சியை இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ஹாங்காங் அணி பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளது.
துபாயில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் ஹாங்காங் அணி மோதின.
இதில் இந்திய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரிகள் என 59 ஓட்டங்கள் சேர்த்தார்.
A wonderful gesture by Team Hong Kong! ??#ViratKohli #INDvHK #CricketTwitter pic.twitter.com/WcFdekhx8C
— Sportskeeda (@Sportskeeda) August 31, 2022
அதிலும் குறிப்பாக சகவீரர் சூர்யகுமார் யாதவுடன் இணைந்து வெறும் 26 பந்துகளில் 68 ஓட்டங்கள் குவித்தது, ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
விராட் கோலி பல நாட்களாக மோசமான பார்மில் இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருந்தது, இந்தநிலையில் விராட் கோலி தற்போது மீண்டும் தனது பார்மிற்கு திரும்பி இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
இந்திய அணி இந்த போட்டியில் வென்ற பிறகு, ஹாங்காங் அணி இந்திய வீரர் விராட் கோலிக்கு கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளனர்.
Outstanding six by Virat Kohli.#ViratKohli #INDvsHKpic.twitter.com/JLy4uevEFV
— Square Leg (@Cricket_Is_Here) August 31, 2022
அதில், ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்தியதற்கு நன்றி, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம், இன்னும் பல நம்பமுடியாத நாட்கள் வர உள்ளது, இப்படிக்கு வலிமையுடன் அன்புடன் ஹாங்காங் அணி என எழுதப்பட்டு இருந்தது.
கூடுதல் செய்திகளுக்கு: அணு ஆயுதம் கொண்ட ஈரான் மிகவும் ஆபத்தானது: ஜோ பைடன் எச்சரிக்கை
ஹாங்காங் அணியின் இந்த செயலால் மிகவும் மகிழ்ச்சியடைந்த கோஹ்லி, ஹிங்காங் அணி வழங்கிய ஜெர்சியின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, ஹாங்காங் கிரிக்கெட்டுக்கு நன்றி.
இந்த பரிசு உண்மையிலேயே அடக்கமானது மற்றும் மிகவும் இனிமையானது என தெரிவித்துள்ளார்.