ரூ.4 கோடி கடன் வாங்கி நடுத்தெருவில் நின்றோம்.., நடிகை நீலிமா ராணி எமோஷனல்
ரூ.4 கோடி கடன் வாங்கி கணவரும் நானும் நடுத்தெருவில் நின்றதாக நடிகை நீலிமா ராணி கூறியுள்ளார்.
நீலிமா ராணி பேசியது
குழந்தை நட்சத்திரத்தில் அறிமுகமாகி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காலடி பதித்தவர் நடிகை நீலிமா ராணி. இவர், வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் அண்மையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவர் பேசுகையில், "என்னுடைய 21 வயதில் இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டேன்.
பின்னர், நான் திருமணம் செய்த 6 மாதத்தில் எனது தந்தை இறந்து விட்டார். அதில் இருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை.
கோயிலுக்கு செல்வது, புத்தங்கங்கள் படிப்பது போன்ற பல்வேறு விடயங்களில் ஈடுபட்டு அதில் இருந்து வெளியில் வந்தேன்.
கடந்த 2017-ம் ஆண்டில் எனது கணவரும் நானும் சேர்ந்து வட்டிக்கு கடன் வாங்கி ரூ.4 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க முடிவு செய்தோம். ஆனால், அந்த படம் சரியாக வராமல் படத்தை குப்பையில் தான் போட்டோம்.

தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு ரூ.433 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
பின்னர், நாங்கள் நடுத்தெருவில் தான் நின்றோம். அப்போது நாங்கள் இதனை சரி செய்ய வேண்டும் என்று யோசித்தோம்.
அதனால் தான் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தேன். வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் போன்ற தொடர்களில் நடிக்க துவங்கினேன்.
நாங்கள் வாடகை வீட்டுக்கு கூட போக முடியாமல் நண்பர் ஒருவர் வீட்டில் இருந்தோம். வெற்றி பெற வேண்டும் என்றால் தோல்வியையும் சந்திக்க தயாராக இருந்தோம்.
இதையடுத்து, என்றென்றும் புன்னகை, நிறம்மாறாத பூக்கள் ஆகிய சீரியலை தயாரித்தோம். நாம் சோர்ந்து போய் இருந்தால் யாரும் கை கொடுக்க வர மாட்டார்கள், நாம் தான் நமக்கு நாமே உதவ வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |