போட்டிக்கு முன் பெண்கள் பயன்படுத்தும் இந்த பொருளை பயன்படுத்துவோம்! இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் சுவாரசிய தகவல்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பெண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவோம் என்ற தகவலை நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரை வெல்ல பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
இதனிடையில் இங்கிலாந்து அணி நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் அளித்த ஒரு பேட்டியில், இங்கிலாந்து வீரர்கள் போட்டிக்கு முன் பெண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவோம்.
ஆண்கள் டியோடரண்டை விட பெண்களின் டியோடரண்ட் மிகவும் வாசனையாக இருக்கும்.
நான் டவ் பிராண்டை தான் பயன்படுத்துகிறேன்.
அதில் மாதுளை ஃபளேவர் மிகவும் எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.
