நாங்கள் ஒன்றும் நண்பர்களல்ல... பிரதமர் பதவியை இழந்ததும் ஒரேயடியாகக் கைவிட்ட ரஷ்யா
ஹங்கேரியின் புதிதாக தெரிவாகியுள்ள பிரதமர் Péter Magyar உடன் நடைமுறை சார்ந்த பேச்சுவார்த்தைக்க்குத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்திடர்பாளரான திமித்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், தற்போதைக்கு, எங்களைப் பொறுத்தவரை, நடைமுறை சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான அவரது விருப்பத்தை நாம் மனநிறைவுடன் எதிர்பார்க்கலாம்.

மேலும், இச்சூழ்நிலையில், எங்கள் தரப்பில் பரஸ்பர விருப்பம் உள்ளது; எனவே, புதிய ஹங்கேரிய அரசாங்கம் எடுக்கும் குறிப்பிட்ட நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் பதிவு செய்துள்ளார்.
ஒரு நாள் முன்பு, ரஷ்யா மாகியாரின் தேர்தல் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. மாறாக, ஹங்கேரி இனிமேல் எவ்விதச் சிறப்பு அந்தஸ்தையும் அனுபவிக்கப் போவதில்லை என்றும், ஐரோப்பாவின் பிற நாடுகளைப் போலவே அதுவும் தற்போது நட்பற்ற நாடுகளின் பிரிவில் அடங்குகிறது என்றும் பெஸ்கோவ் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஆனால் பிரதமர் ஓர்பானின் படுத்தோல்வி ரஷ்யாவை சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கத் தூண்டியதுடன், ஹங்கேரி மக்களின் முடிவை தாங்களும் மதிப்பதாக அறிவிக்க வைத்துள்ளது.
எச்சரிக்கையாக இருக்கும்
அத்துடன், நாங்கள் ஓர்பானுடன் ஒருபோதும் நண்பர்களாக இருந்ததில்லை என்றும் பெஸ்கோவ் அறிவிக்கும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், ரஷ்யாவுடனான உறவில் ஒரு பெரிய பிளவை எதிர்பார்க்கக் கூடாது என்று மாக்யார் திங்களன்று தனது முதல் அறிக்கைகளில் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹங்கேரி ஒரு யதார்த்தமான வெளிவிவகாரக் கொள்கையைப் பின்பற்றும் என்றும், அதாவது ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்குவதுடன், உக்ரைன் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் இந்தக் கொலைகளை முடிவுக்குக் கொண்டுவந்து, போரை நிறுத்துவது நன்றாக இருக்கும் என்று தாம் புடினிடம் எடுத்துரைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |