மீண்டும் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும்! வெளியான முக்கிய தகவல்
அமெரிக்க இராணுவ படைகள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும் என அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட்ட 31ம் தேதி ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்க படைகள் வெளியேறின.
மீட்பு பணியின் போது காபூல் விமான நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.(கே) பயங்கரவாதிகளுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி பைடன் கூறினார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் அமெரிக்க படைகள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும் என்று தான் நம்புவதாகக் அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் மிகப் பெரியதாக இருக்கும் என்பதால் அமெரிக்க படைகள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும்.
பஞ்ச்ஷீர் மாகாணத்தில் எதிர்ப்பு படை இருப்பதால் தலிபான்காளல் ஆப்கானிஸ்தானை நிர்வாகிக்க முடியாது.
காலப்போக்கில் எதிர்ப்பு படையின் ஆதிக்கம் அதிகரிக்கும், தாலிபானுக்குப் பிறகு பெரியளவில் ஐ.எஸ் வருவார்கள்.
அடுத்த ஆண்டில் நாடு முழுவதும் மோதல் வெடிக்கும். மேற்கத்திய நாடுகளின் நலன்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.