வலிமையுடன் மீண்டு வருவோம்! மும்பை இந்தியன்ஸ் வீரர் பதிவு
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் கேமரூன் கிரீன் , தங்கள் அணிக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் வெளியேற்றம்
நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் படுதோல்வியைடந்தது.
இதனால் தொடரை விட்டு வெளியேறியது. மும்பை அணி ரசிகர்கள் தோல்வியால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 61 ஓட்டங்களும், திலக் வர்மா 43 ஓட்டங்களும், கேமரூன் கிரீன் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
கேமரூன் கிரீனின் பதிவு
இந்நிலையில் ஆல்ரவுண்டர் வீரரான கேமரூன் கிரீன் நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், 'மும்பை குடும்பத்தினருக்கு நன்றி. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. வலிமையுடன் மீண்டு வருவோம்' என கூறியுள்ளார்.
Thank you Mumbai Family ? Thank you for all the support. Will comeback stronger ? pic.twitter.com/js8iKorN7l
— Cameron Green (@CameronGreen_) May 27, 2023