சசிகலா எப்படி இருக்கிறார்? ஓ.பி.எஸ் எங்களிடம் வந்தால் ஏற்றுகொள்வோம்... டிடிவி தினகரன் அதிரடி
சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்தால் வரவேற்போம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்.
சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்தால் கண்டிப்பாக வரவேற்போம். பாஜகவுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை.
சசிகலா நலமுடன் இருக்கிறார், மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வில் இருக்கிறார்.
பிப்ரவரி 24ஆம் திகதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலுள்ள அவர் திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்துவார்.
பரதனாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார். தற்போது அவர் மனகசப்பில் இருக்கிறார்.
சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம். அவர் மீண்டும் பரதனானார் என ஏற்றுக்கொள்வோம் என கூறியுள்ளார்.