மிரட்டும் சீனா... பதிலடிக்கு தயாராகும் தைவான்: ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பு
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கான ஏற்கனவே அதிகரித்துள்ள பதற்றங்களை மோசமாக்கும்
இராணூவத்தை பயன்படுத்தியும் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக சீனா - ஆயுதங்களை விற்க முடிவு
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், தைவானுக்கு பில்லியன் டொலர் மதிப்பிலானா ஆயுதங்களை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் பெற்றுள்ளது.
தைவானுக்கு 1.1 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவலை பென்டகன் அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் சீனாவுக்கான ஏற்கனவே அதிகரித்துள்ள பதற்றங்களை மோசமாக்கும் என்றே கூறப்படுகிறது.
தைவானுக்கு ஆயுதங்கள் விற்பன தொடர்பில் வெள்ளிக்கிழமை அறிவித்த பென்டகனின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம், குறித்த ஆயுத தொகுப்பில் 60 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 100 சிறப்பு ஏவுகணைகள் அடங்கும் என தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் தைவானின் பாதுகாப்புக்கு இந்த ஆயுதங்கள் உதவும் என்றே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தைவான் தீவை இராணூவத்தை பயன்படுத்தியும் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக சீனா கூறிவரும் நிலையில், அமெரிக்கா தற்போது 1.1 பில்லியன் டொலருக்கான ஆயுதங்களை விற்க முடிவு செய்துள்ளது.
தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வழங்குவதற்கு அமெரிக்கா சட்டத்தால் கட்டுப்பட்டிருக்கிறது, மேலும் தைவான் தீவைத் தாக்கினால் அதைக் காக்க இராணுவத்தைப் பயன்படுத்தவும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆனால், தைவான் தொடர்பில் அமெரிக்கா நெருப்புடன் விளையாடுவதாக சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.