உடல் எடை அதிகரிக்க சிரமப்படுகிறீர்களா.? இத மட்டும் செய்து குடித்து பாருங்க
உடல் எடையை குறைக்க போராடுபவர்கள் மத்தியில் உடல் எடையை அதிகரிக்க போராடும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதற்காக எந்த மாதிரியான பானங்களை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழ பானம்
வாழைப்பழமானது இலகுவாக கிடைக்ககூடிய ஒரு பழவகையாகும். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
தினமும் இரண்டு முறை வாழைப்பழம் ஜூஸ் குடித்தால் எடை அதிகரிக்கும். இதில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ள முடியும்.
அவகோடா பழ ஜூஸ்
இந்த பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களுடன், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஈ மற்றும் கே இருப்பதால் இது எடை அதிகரிக்க உதவும். மேலும் இதை தொடர்ந்து 3 மாதங்கள் குடித்தால் சிறந்த பலனை பெறலாம்.
பேரிச்சம்பழம் பானம்
எடையை அதிகரிக்க சிறந்த ஒரு பழமாக இருந்து வருவது இந்த பேரிச்சம்பழம் தான். நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம், வைட்டமின்கள் ஏ, சி, ஈ, துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற சத்துகள் நிறைந்து இருப்பதால், இது உடல் எடையை அதிகரிக்க உதவும்.
இந்த முறையில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து குடித்து வந்தேலே போதும் என்றே கூறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |