சும்மா விறுவிறுனு எடை குறையனுமா; அப்போ இத பண்ணுங்க!
இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவுக்கு அடுத்தபடியாக உடலுக்கு பிரச்சினையை தருவது எடை அதிகரிப்பு. உலக நாடுகளில் எங்கெல்லாம் வித்தியாசமான சத்தற்ற உணவுகள் அதிகரித்து வருகின்றதோ, அங்கெல்லாம் உடல் எடை அதிகரிப்பும் வருகின்றது என்று கூறலாம்.
தற்போதைய சமூகத்தில் பல உபாதையான விடயங்கள் நடைப்பெற்று வருகின்றன. அதிலும் உடல் எடை அதிகரிப்பால் பலர் மனம் உடைந்தும் காணப்படுகின்றன. சிலருக்கு உடல் எடை அதிகரிப்பானது, அவர்களது வாழ்கை முறைப்படியும் அதிகரிக்கும் என ஆய்வ கூறுகின்றது.
இதற்கு உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையென்று மனவருந்த வேண்டாம். அதற்கு எல்லாம் காரணமாக இருப்பது நமது சமையலறையில் உள்ள ஒரு சில பொருட்கள். அதை வைத்து எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்று தெரிந்துக் கொள்வோம்.
- சீரகம், சோம்பு மற்றும் ஓமம் ஆகியவற்றை ஒரு தே.கரண்டியாக எடுத்து ஒரு கப் சூடான தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிக்கட்டி தேன் சேர்த்து குடித்தால் எடை சீக்கரமாக குறைந்துவிடும்.
- தண்ணீரை கொதிக்க வைத்து காய்கறிகளை வேக வைத்து சாப்பிட்டால் அது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்.
- எண்ணெய் உணவில் ருசியை அதிகரிக்கும். ஆனால் எடை அதிகரிப்புக்கு அதுவே காரணமாக இருக்கும். ஆகவே உணவில் எண்ணெய் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- மீன் மற்றும் இறைச்சியை சாப்பிடுவது குறைத்துக் கொள்ள சொல்லுவார்கள். ஆனால் எடை குறைப்பவர்கள் அதை வேகவைத்து பின் மேலோட்டமாக வறுத்து சாப்பிட்டால் எடை அதிகரிக்காது.
- தினமும் காலையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிப்பதன் மூலம் கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருந்த கொழுப்புகள் முற்றிலும் வெளியேறிவிடும்.
- உப்பை தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
- வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
- தினமும் டீ மற்றும் காபி குடிக்கும் போது பட்டை தூளை சேர்த்து குடித்தால், எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம்.