21 நாட்களில் 3 கிலோ எடையை குறைக்கலாம்! எப்படின்னு தெரியணுமா?
உடல் எடை அதிகமாக இருந்தாலே நமக்கு கவலை தான். முக்கியமாக பெண்களுக்கு எல்லா டிரஸ்ஸையும் போட முடியாது என்ற கவலை இருக்கும். 3 வாரத்தில் 3 கிலோ எடையை எப்படி குறைக்கலாம் என்பதை தான் நாம் பார்க்க போகிறோம்.
மூலிகை வெந்நீர்
பொதுவாக இஞ்சி செரிமானத்திற்கு ஏற்றது என்று நாம் அறிந்ததே. வெதுவெதுப்பான நீரில் உலர்ந்த இஞ்சியை சேர்த்து, அந்த நீரை நாள் முழுவதும் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.
1 லிட்டர் தண்ணீரில் உலர் இஞ்சியை போட வேண்டும். பின்பு அதை கொதிக்க வேண்டும். ஆறிய பின்பு அந்த நீரை எடுத்துக் குடிக்க வேண்டும்.
பயன்கள்
நம் உடலின் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
சளி மற்றும் இருமலில் இருந்து பாதுகாக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
வீக்கம், வாயு மற்றும் வயிற்று வலியைக் குறைக்கிறது.
உடற்பயிற்சிகள்
கபால்பதி பிராணயாமா
கபால்பதி பிராணயாமா பயிற்சியை நாம் 10 முதல் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். அது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், வயிற்று தசைகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
நமது உடலில் உள்ள நரம்புகளையும், ரத்த ஓட்டத்தையும் சுத்தப்படுத்துகிறது. முகப்பொலிவு தருவது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரம் செய்வது நமக்கு தசைகள் மற்றும் மூட்டுகளை பலப்படுத்த உதவுகிறது. உடல் செரிமான அமைப்புகளை சீராக்கி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
தூக்கமின்மையை எதிர்த்து போராட வைப்பது மட்டுமல்லாமல், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளையும் ஒழுங்குபடுத்துகிறது.
நடைபயிற்சி
காலையில் எழுந்து நாம் வாக்கிங்க் சென்றாலே உடலில் பாதி பிரச்சனை சரியாகிவிடும். தினமும் காலை மற்றும் இரவு 40-50 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
இது, ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், உடல் கொழுப்பை குறைக்கவும், இதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் வகை 2 நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நிலைகளை நிர்வகிக்கவும் உதவுகிறது.
விரதம்
ஒரு நாளில் 8-10 மணி நேரம் உணவு உண்ணலாம். 14-16 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கலாம். சூரிய உதயத்திற்கு பிறகு காலை உணவையும், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |