ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்ல வாய்ப்பு! ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்படும் சீனா வீராங்கனை
ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாளு தூக்கும் போட்டியில் 49 கிலோ பிரிவில் தங்கம் வென்ற சீனா வீரராங்கனை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் 49 கிலோ பிரிவில் சீனாவின் Hou Zhihui அதிகட்பசமாக 116 கிலோவும், மொத்தம் 210 கிலோ பளு தூக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.அதுமட்டுமின்றி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
இந்தியா வீராங்கனை மீராபாய் அதிகட்சமாக 115 கிலோவும், மொத்தம் 202 கிலோ பளு தூக்கி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வென்ற முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் Windy cantika அதிகபட்சமாக 110 கிலோவும், மொத்தமாக 194 கிலோ பளு தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், தங்கப் பதக்கம் வென்ற Hou Zhihui ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்துப்படவுள்ளதாகவும், அதற்காக அவர் டோக்கியோவிலே தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஊக்க மருந்து சோதனையில் Hou Zhihui தோல்வியடைந்தால் அவருக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்படும்.
ஒலிம்பிக் விதிகளின் படி, அந்த தங்கப் பதக்கம், இரண்டாம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய்-க்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.