இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் - யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?

Thoothukudi India Commonwealth Games
By Karthikraja Jul 27, 2026 06:08 AM GMT
Report

காமன்வெல்த் விளையாட்டு தொடரில், பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி

2026 காமன்வெல்த் விளையாட்டு தொடர், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், ஆண்களுக்கான பளுதூக்குதல் 65 கிலோ பிரிவில், இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் - யார் இந்த ராஜா முத்துப்பாண்டி? | Weightlifter Raja Muthupandi Won Silver In Cwg2026

ஸ்னாட்ச் (Snatch) முறையில் 126 கிலோவையும், கிளீன் அண்ட் ஜெர்க் (Clean and jerk) முறையில் 160 கிலோவையும் என மொத்தமாக 286 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 

இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் - யார் இந்த ராஜா முத்துப்பாண்டி? | Weightlifter Raja Muthupandi Won Silver In Cwg2026

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப் பாண்டி சிறு வயது முதலேபளுதூக்குதலில் ஆர்வம் காட்டி வருகிறார்.

2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்ற அவர், 62 கிலோ எடைப்பிரிவில் 266 கிலோ எடையைத் தூக்கி 6வது இடத்தைப் பிடித்திருந்தார். 

அன்று காய்கறி விற்றவர், இன்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார் - யார் இந்த ஜண்டு குமார்?

அன்று காய்கறி விற்றவர், இன்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார் - யார் இந்த ஜண்டு குமார்?

2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக சில ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டியில் விளையாட முடியாத நிலை இருந்தது. 2022 காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் 296 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 299 கிலோதூக்கி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ளராஜா முத்துப்பாண்டி, "தங்கம் வெல்வதற்காக நாங்கள் முழு முயற்சியையும் வெளிப்படுத்துவோம் என்று என் பயிற்சியாளர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.ஆனால், நான் சிறப்பாகச் செயல்படவில்லை. அதனால் நான் நிச்சயமாக ஏமாற்றமடைந்துள்ளேன்.

இந்த வெற்றியை என் பெற்றோருக்கும், என் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கும் சமர்ப்பிக்கிறேன். இங்கு கற்றுக்கொண்ட பாடங்களில் கவனம் செலுத்தி, என் பயிற்சியாளரின் அறிவுறுத்தல்களின்படி பயிற்சி செய்து, இனிவரும் காலங்களில் கடினமாக உழைப்பேன்," என்று தெரிவித்துள்ளார்.  

ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.    

இந்திய அணி, ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US