இலங்கையில் பிரபல தமிழ் நடிகருக்கு கிடைத்த வரவேற்பு: வைரலான வீடியோ
படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு சென்ற பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் வீடியோ வைரலாகியுள்ளது.
இலங்கையில் படப்பிடிப்பு
தமிழில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடக்கிறது. இதற்காக இலங்கை சென்ற படக்குழுவுக்கு ரசிகர்களிடையே உற்சாக வரவேற்பு கிடைத்தது.
படப்பிடிப்பில் இருக்கும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
#Sivakarthikeyan Rasigar Mandram In SriLanka 😍🔥
— Kolly Corner (@kollycorner) March 10, 2025
he is definitely gonna be a huge pan india star in the near future 💯🤙pic.twitter.com/Xbhlk3VpjZ
இந்தி எதிர்ப்பு போராட்டம்
அதே சமயம், 60களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதைக்களம் என்பதால், அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையிலான செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சாலைகளில் பழைய வாகனங்கள் செல்லும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன. அதில் பேருந்து ஒன்றில் 'இந்தி வாழ்க' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Old memories Coming Sk's #Parasakthi pic.twitter.com/n4Jok4LT2K
— Chichilubu 💙❼ (@guruawesome) March 11, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |