சர்வதேச நிறுவனமொன்றால் வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் ஏற்பட்ட அசௌகரியம்
இலங்கையில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் பிரபல சர்வதேச நிறுவனமொன்று வெள்ளவத்தையில் தனது நிறுவனத்தின் கழிவுப்பொருட்களை வீசியுள்ளதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான புகைப்படங்களை சமூக அரசியல் ஆய்வாளர் பிரசாத் வெலிகும்பர தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட நான்கு கடற்கரைகளில் இதுவுமொன்று எனவும் மக்கள் நீராடுவதற்காக பயன்படுத்தும் ஒரே கடற்கரை இதுவெனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளவத்தை கடற்கரை பிரதேசம் என்பது அதிக அளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் கடற்கரை பிரதேசமாகவும் காணப்படுகிறது.
அங்கு தற்போது காணப்படும் நிலைபற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |