வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய ஐக்கிய அமீரக பயணம்... இன்று சொத்து மதிப்பு ரூ 9100 கோடி
கேரளாவில் ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் செயல்பட்டுவந்த மருத்துவர் ஒருவர் தற்போது ரூ 20,200 கோடி சந்தை மதிப்பு கொண்ட சுகாதார குழுமத்தின் தலைவராக மாறியுள்ளார்.
ஏழை எளிய மக்களுக்காக சேவை
தற்போது 70 வயதான மருத்துவர் ஆசாத் மூப்பன் (Azad Moopen) என்பவர் சுதந்திர போராட்ட தியாகியும் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஏ மூப்பன் என்பவரின் மகனாவார்.
மருத்துவ பட்டப்படிப்பில் தங்கம் வென்றவர் ஆசாத் மூப்பன். ஏழை எளிய மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் செயல்பட்டு வந்தவர்.
பல்கலைக்கழக பேராசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கியவர், ஒருமுறை அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அந்த பயணம் அவரது பாதையை மொத்தமாக மாற்றியது.
1980களில்தான் டாக்டர் மூப்பன் முதன்முறையாக ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார். கேரளாவில் சொந்த கிராமத்தில் மசூதி ஒன்றை புதுப்பிப்பதற்காக பணம் திரட்டுவதற்காக அங்கு அவர் சென்றுள்ளார்.
ஆனால் தனது நண்பர் ஒருவரின் ஆலோசனையை ஏற்று ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் தங்க முடிவு செய்துள்ளார் மூப்பன். தொடர்ந்து இரண்டு படுக்கையறை கொண்ட குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்குள்ள இந்தியா, இலங்கை உட்பட உள்ள எளிய மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவையை சின்னதாக துவங்கியுள்ளார்.
அசுர வளர்ச்சி கண்ட Aster DM Healthcare
நாளுக்கு 12 மணி நேரம் வரையில் மருத்துவர் மூப்பன் உழைத்துள்ளார். அதன் பின்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி சுகாதார மைய்யங்கள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை ஒவ்வொன்றாக துவங்கியுள்ளார்.
2000 ஆண்டு காலகட்டத்தில், மருத்துவராக தமது பணிகளை தொடர முடியாத வகையில் அவரது தொழில் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளதை மருத்துவர் மூப்பன் உணர்ந்துள்ளார். 2008ல் ஆசாத் மூப்பனின் Aster DM Healthcare குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டொலர் என்று கணிக்கப்பட்டது.
அதன் பின்னர் அசுர வளர்ச்சி கண்ட Aster DM Healthcare குழுமம், 2012ல் 400 மில்லியன் டொலர் சந்தை மதிப்பை எட்டியது. அத்துடன் இந்தியாவிலும் கிளைகளை பரப்பினார்.
தற்போது Aster DM Healthcare குழுமத்தில் 20 மருத்துவமனைகள், 90 சுகாதார மைய்யங்கள் மற்றும் 200 மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி நோயாளிகள் Aster DM Healthcare குழும மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது ஆசாத் மூப்பனின் சொத்து மதிப்பு என்பது இந்திய மதிப்பில் ரூ 9,144 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |