ராஜினாமா செய்தார் பிரித்தானிய சுகாதாரச் செயலர்: பிரித்தானிய அரசியலில் பரபரப்பு
பிரித்தானிய சுகாதாரச் செயலர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் உண்மையாகியுள்ளது.
பிரித்தானிய சுகாதாரச் செயலர் ராஜினாமா
பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 1,500 இருக்கைகளை லேபர் கட்சி இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இதற்கிடையில், பிரதமர் பதவியைப் பெற பிரித்தானியாவின் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் சூழ்ச்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஸ்ட்ரீட்டிங்கின் நண்பர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார்கள்.
இதற்கிடையில், தலைவர் பதவியைப் பிடிக்க 81 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில், ஸ்ட்ரீட்டிங்குக்கு அவளவு ஆதரவு இல்லை பிரதமர் இல்ல வட்டாரம் கூறியிருந்தது.
இந்நிலையில், உண்மையாகவே ஸ்ட்ரீட்டிங் தனது சுகாதாரச் செயலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

அவர் பிரதமர் ஸ்டார்மருக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆக, ஸ்ட்ரீட்டிங் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கு சாதகமான சூழல் உருவாகிவிட்டது.
இதற்கிடையில், பிரதமர் பதவிக்கான போட்டி மும்முரமாகிவருகிறது. கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான ஆன்டி பர்னாம் பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவருக்கு லேபர் கட்சியினரிடையே ஆதரவும் உள்ளது.
விடயம் என்னவென்றால், ஆன்டி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. ஆக, அவர் ஏதாவது ஒரு தொகுதியில் இடத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனால்தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |