பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக்: என்ன காரணம்?
லாகூர் மற்றும் கராச்சி நகரங்கள் நடத்தும் PSL 2026 போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PSL 2026
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போல பாகிஸ்தானில் PSL எனும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2026 சீஸன் போட்டித் தொடரை லாகூர், கராச்சி நகரங்கள் நடத்துகின்றன.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலால், பாகிஸ்தான் எண்ணெய் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
பார்வையாளர்கள் இன்றி
இதன் காரணமாக, 2026ஆம் ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானங்களில் நடைபெறும்.
இத்தொடர் முதலில் திட்டமிடப்பட்டிருந்த 6 மைதானங்களில் நடைபெறுவதற்கு பதிலாக, தற்போது இரண்டு மைதானங்களுக்கு மட்டுமே சுருக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லாகூரில் நடைபெறவிருந்த தொடக்க விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |