ஐரோப்பிய ஒன்றியத்தை அடுத்து... இஸ்ரேலியர் நால்வர் மீது தடைகள் விதித்த ஆசிய நாடு
இஸ்ரேலியர்கள் நால்வர் மீது சிங்கப்பூர் அரசாங்கம் நிதித் தடைகளை விதித்துள்ளதுடன், அவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அட்டூழியத்தில் ஈடுபட்டவர்கள்
மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மிகக் கடுமையான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இந்த நால்வர் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் நாட்டவர்களான Meir Mordechai Ettinger, Elisha Yered, Ben-Zion Gopstein மற்றும் Baruch Marzel ஆகிய நால்வருமே மேற்குக் கரையில் அட்டூழியத்தில் ஈடுபட்டவர்கள்.
சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன் பாலஸ்தீனத்தில் இரு நாடுகள் தீர்வுக்கான வாய்ப்புகளையும் சிதைக்கும் வகையில் இவர்கள் நடந்துகொண்டுள்ளனர்.
சர்வதேச சட்டம் மற்றும் இரு நாடுகள் தீர்வுக்கான உறுதியான ஆதரவாளராக, சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான செயல்கள் மூலம் களத்தில் உண்மைகளை மாற்றுவதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சிகளையும் சிங்கப்பூர் எதிர்க்கிறது என்றும் வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நால்வரும் ஏற்கனவே, ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைகளை எதிர்கொண்டு வருபவர்கள். இந்த நிலையில், இஸ்ரேலிய குடியேற்றக் குழுக்களின் தலைவர்கள் மீது தடை விதிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
மட்டுமின்றி, மேற்குக் கரை அல்லது காஸாவின் சில பகுதிகளை இணைப்பது பற்றி பேசிய இஸ்ரேலிய அரசியல்வாதிகளையும் அவர் கடிந்து கொண்டார்.

பாதுகாப்பை வழங்குவதாக
மேலும் E1 தீர்வுத் திட்டம் என்று அழைக்கப்படுவது மேற்குக் கரையை துண்டு துண்டாகப் பிரிக்கும் இஸ்ரேலின் கொடூர முகம் என்றும் கூறியிருந்தார்.
பொருளாதாரத் தடைகளை விதிப்பதைத் தவிர, சிங்கப்பூர் சரியான சூழ்நிலையில் பாலஸ்தீன அரசையும் அங்கீகரிக்கும் என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
சர்வதேச சட்டத்தின் கீழ் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை சட்டவிரோதமானது என்றே பெரும்பாலான சர்வதேச சமூகம் கருதுகிறது. ஆனால் இஸ்ரேல் இதை மறுத்து வருகிறது, வரலாற்று மற்றும் பைபிள் ரீதியான தொடர்புகளை அந்தப் பகுதியுடன் மேற்கோள் காட்டி, குடியேற்றங்கள் பாதுகாப்பை வழங்குவதாக சாதித்து வருகிறது.

1965 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்து, இஸ்ரேலும் சிங்கப்பூரும் நெருங்கிய தூதரக மற்றும் இராணுவ உறவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் பாலஸ்தீன நாடாக ஐ.நா. அங்கீகரிப்பதற்கு ஆதரவை வெளிப்படுத்தும் ஏராளமான தீர்மானங்களுக்கு ஆதரவாக சிங்கப்பூர் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |