இந்த உலகக்கிண்ணத் தொடரில் அதை காட்டுவோம்: மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர்
கிரிக்கெட்டை நன்கு அறிந்த தமது அணி உலகக்கிண்ணத் தொடரில் அதை காட்டுவோம் என மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ரோவ்மன் பவுல் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கிண்ணத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணி, அறிமுக அணியாக உலகக்கிண்ணத்தில் விளையாட உள்ள பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ரோவ்மன் பவுல் (Rovman Powell) தமது அணியின் பலம் குறித்து நம்பிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், ''இது தன்னம்பிக்கை கொண்ட அணி. டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்கு அறிந்த அணி இது. எனவே, இந்த உலகக்கிண்ண தொடரின்போது அதை எப்படி காட்டுவோம் என நம்பிக்கை உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |