ஜாம்பவான் அணிகளே செய்யாத வரலாறு படைத்த வெஸ்ட் இண்டீஸ்! அடுத்த 4 இடங்களில் இலங்கை
ஒருநாள் கிரிக்கெட்டில் 50 ஓவர்களையும் சுழற்பந்துவீச்சாளர்களையே வீச வைத்து மேற்கிந்திய தீவுகள் வரலாறு படைத்துள்ளது.
50 ஓவர்கள்
டாக்காவில் நடந்து வரும் ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 50 ஓவர்களில் 213 ஓட்டங்கள் எடுத்தது.
மேற்கிந்திய தீவுகளின் மோட்டி 3 விக்கெட்டுகளும், ஹொசெய்ன் மற்றும் அதனசி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். அக்கேல் ஹொசைன், ரஸ்டன் சேஸ், காரி பியர்ரே, குடாகேஷ் மோட்டி மற்றும் அலிக் அதனசி தலா 10 ஓவர்கள் வீசினர்.
புதிய வரலாறு
இதன்மூலம் ஒருநாள் போட்டியில் மொத்த 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசிய அணி என்ற புதிய வரலாறு படைத்தது மேற்கிந்திய தீவுகள்.
இதற்கு முன்பு இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள், 2004 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 44 ஓவர்கள் வீசியிருந்தனர்.
அதற்கு முன்பும் 1998 (நியூசிலாந்து), 1996 (மேற்கிந்திய தீவுகள்) ஆண்டுகளில் இருமுறை 44 ஓவர்களையும், 1995ஆம் (மேற்கிந்திய தீவுகள்) ஆண்டில் ஒருமுறை 43 ஓவர்களையும் இலங்கை அணி வீச வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |