நெருப்புடன் விளையாடும் மேற்கத்திய நாடுகள்... உலகப் போரைத் தூண்டும் அமெரிக்கா: கொந்தளித்த ரஷ்யா
ரஷ்யாவுக்குள் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை முன்னெடுக்க உக்ரைனுக்கு அனுமதி அளித்திருப்பது நெருப்புடன் விளையாடும் செயல் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் மட்டும் நின்றுவிடாது
அத்துடன், மூன்றாம் உலகப் போர் உருவானால் அது ஐரோப்பாவில் மட்டும் நின்றுவிடாது என்றும் ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்தது. ஆகஸ்டு 6ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் அதிரடியாக நுழைந்து தாக்குதலை முன்னெடுத்தது.
தற்போது 100 குடியிருப்பு பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட நிலப்பரப்பையும் தங்கள் கட்டுப்பாட்டில் உக்ரைன் கொண்டுவந்துள்ளது.
இது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ரஷ்யா எதிர்கொள்ளும் மிகப்பெரிய வெளிநாட்டுத் தாக்குதல் என்றே கூறப்படுகிறது. ஆனால், மறக்க முடியாத பதிலடி உறுதி என்றே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் போரை மேற்கத்திய நாடுகளே தூண்டி விடுவதாக Sergei Lavrov குற்றஞ்சாட்டியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சராக செயல்பட்டவர் Sergei Lavrov.
மேற்கத்திய ஆயுதங்களை ரஷ்ய மண்ணில் பயன்படுத்தக் கோருவது என்பது வினையை விலை கொடுத்து வாங்குவது போனறது எனவும் Sergei Lavrov தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உறுதி செய்துள்ளது
உக்ரைன் மீது போர் தொடுத்ததன் பின்னர், மேற்கத்திய நாடுகளின் ஈடுபாட்டை புடின் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். மட்டுமின்றி, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுடன் ஒரு போருக்கு தாம் தயாராக இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது மேற்கத்திய நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை ரஷ்யா உறுதி செய்துள்ளது என்றார் Sergei Lavrov. மேலும், மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் வேலையை அமெரிக்கா செய்து வருகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது ஐரோப்பாவை மிக மோசமாக பாதிக்கும் என்றார். ஆனால், குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் முன்னெடுத்துள்ள திடீர் ஊடுருவல் என்பது அமெரிக்காவின் ஒப்புதலுடன் நடந்தவை அல்ல என்றும், அதில் தங்களுக்கு பங்கில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |