அமெரிக்காவில் சுத்திகரிப்பு ஆலையில் நச்சு வாயு கசிவு: 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் வேதிப்பொருள் கசிவு காரணமாக 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கர வேதிப்பொருள் கசிவு
அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள கனாவா கவுண்டியில் உள்ள Catalyst Refiners என்ற சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வேதிப்பொருள் கசிவு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்ஸ்டிடியூட் பகுதியில் புதன்கிழமை காலை இந்த வெடிப்பு சம்பவமானது அரங்கேறியுள்ளது.

நைட்ரிக் அமிலம் மற்றும் பெயரிடப்படாத மற்றொரு வேதிப் பொருளின் வேதிவினையே நச்சு வாயு கசிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஊழியர்கள் மற்றும் மீட்பு படையினர் உட்பட 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |