கொலம்பியாவில் பயங்கர குண்டுவெடிப்பு: 14 பேர் உயிரிழப்பு: 38 பேர் படுகாயம்
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கு கொலம்பியாவில் குண்டுவெடிப்பு
மேற்கு கொலம்பியாவின் காக்கா(Cauca) மாகாணத்தில் உள்ள பான் அமெரிக்கன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதுடன் 38 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் மட்டுமல்லாமல், நாட்டின் முக்கியமான போக்குவரத்து நெடுஞ்சாலையும் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என்று உள்ளூர் ஆளுநர் ஆக்டேவியோ குஸ்மான் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொலம்பிய அரசு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு FARC கொரில்லா ராணுவத்தின் அதிருப்தி குழுக்களே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் போதைப்பொருள் கடத்தல் கிளர்ச்சியாளர்கள் குழு தலைவர் இவான் மோர்டிஸ்கோ தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ குற்றம்சாட்டியுள்ளார்.
மே மாத இறுதியில் அந்த நாட்டில் முக்கியமான ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது, இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அந்நாட்டின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |