மேற்கத்திய பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவில் கடுமையான சிக்கல்! போட்டுடைத்த ரஷ்ய அமைச்சர்
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவில் கடுமையான தளவாட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன என ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனால், ரஷ்யாவின் பொருளாதாரம், ரூபிள் மதிப்பு மற்றும் பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.
கோட்டையை முற்றுகையிடுவோம்... திமுக அரசுக்கு 72 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை
இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவில் கடுமையான தளவாட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன என்று ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் விட்டலி சேவ்லியேவ் கூறினார்.
தெற்கு ரஷ்யாவின் அஸ்ட்ராகான் பகுதிக்கு விஜயம் செய்தபோது பேசிய விட்டலி சேவ்லியேவ் இவ்வாறு கூறினார்.
ரஷ்ய கூட்டமைப்பு மீது விதிக்கப்பட்ட தடைகள், நம் நாட்டில் உள்ள அனைத்து தளவாடங்களையும் கிட்டத்தட்ட நாசமாக்கிவிட்டன.
இதன் விளைவாக புதிய தளவாட வழித்தடத்தை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
சரக்கு போக்குவரத்திற்கு ரஷ்யா இப்போது வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை பெரிதும் நம்பியிருக்கிறது என விட்டலி சேவ்லியேவ் கூறினார்.