பாரிஸ் வணிக வளாகம் ஒன்றில் உயிர் பயத்தில் சிதறி ஓடிய மக்கள்: வெளிவரும் பகீர் சம்பவம்
பாரிஸ் நகரில் அமைந்துள்ள முக்கிய வணி வளாகம் ஒன்றில் திடீரென்று துப்பாகி சத்தம் கேட்ட நிலையில், உயிர் பயத்தில் மக்கள் சிதறி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Westfield வணிக வளாகம்
பாரிஸ் நகரில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் குறித்த சம்பவம் நடந்துள்ளது. தகவலையடுத்து Westfield வணிக வளாகத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர். இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெலியான காணொளி பதிவுகளில், வாடிக்கையாளர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடுவதுடன், வெளியேறும் பகுதியை நோக்கி பலர் விரைவதும் பதிவாகியுள்ளது.
Credit: Twitter
மட்டுமின்றி, கடை ஊழியர்கள் அவசர அவசரமாக தங்கள் கடைகளை மூடுவதும் அந்த காணொளிகளில் பதிவாகியுள்ளது. பல வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் ஒளிந்து கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதனிடையே, பொலிசார் அப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், சம்பவம் நடந்த பகுதியை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால், முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கி சூடு சம்பவம் வெறும் வதந்தி எனவும், அப்படியான சத்தம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என பாரிஸ் நகர பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் வெறும் வதந்தி
அந்த சம்பவத்தால் மக்கள் பீதியடைந்துள்ளதுடன், தேவையின்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, ஐந்தாவது மாடியில் இருந்து ஒருவர் குதித்துள்ளதாகவும், அதுவே மக்கள் உயிர் பயத்தில் வெளியேற காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
Credit: Twitter
மேலும், சம்பவம் நடந்த வணிக வளாகம் அருகாமையில் பேருந்துகள் மற்றும் டிராம் வண்டிகளை தற்போது தடை செய்துள்ளனர். பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிக எண்ணிக்கையிலான பொலிசார் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ல் வெளியான தகவலின் அடிப்படையில், பிரான்ஸ் நாட்டில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்து சென்ற வணிக வளாகம் Westfield என கூறப்படுகிறது.
அந்த ஆண்டில் மொத்தம் 42 மில்லியன் வாடிக்கையாளர்கள் Westfieldல் வந்து சென்றுள்ளனர்.