2025 எப்படி இருக்கும்? பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸின் வியப்பூட்டும் கணிப்புகள்
பாபா வங்காவும் நாஸ்ட்ரடாமஸும் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்களானாலும், 2025ஆம் ஆண்டைக்குறித்து ஒரே விதமாக கணித்துள்ள விடயம் வியப்பை உருவாக்கியுள்ளது.
2025 எப்படி இருக்கும்? பாபா வங்காவின் கணிப்பு
1911ஆம் ஆண்டில் பல்கேரியா நாட்டில் பிறந்து, 1996ஆம் ஆண்டில் மரணமடைந்தவர் பாபா வங்கா.
பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய பாபாவை, பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடித்தனர் அவரது குடும்பத்தினர்.
தனது கண் பார்வையை இழந்த பின்னரே, தனது முதல் கணிப்பை கணித்த பாபா, தான் காணாமல் போனபோது, தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு விடயங்களை துல்லியமாக கணித்த பாபா, 2025ஆம் ஆண்டைக் குறித்தும் கணித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் உலக அளவில் ஒரு மாபெரும் பேரழிவு நிகழ இருப்பதாக கணித்துள்ளார் பாபா.
ஐரோப்பாவில் எழும் ஒரு பிரச்சினை குறித்து கணித்துள்ள பாபா, 2025ஆம் ஆண்டில், இரண்டு நாடுகளுக்கிடையே ஒரு போர் உருவாகும் என்றும், அது உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளார்.
நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு
பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாமஸோ வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர். அவர் 1566ஆம் ஆண்டே மரணமடைந்துவிட்டார்.
என்றாலும், அவரும் தான் எழுதிவைத்துள்ள கணிப்புகளில் 2025ஆம் ஆண்டில் பயங்கர போர்கள் வெடிக்கும் என்றும் மாபெரும் பேரழிவு ஏற்படும் என்றும் எழுதிவைத்துள்ளார்.
அத்துடன், ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்றும், பிரேசில் நாட்டில், எரிமலை வெடிப்பு மற்றும் மோசமான பெருவெள்ள பாதிப்பு ஏற்படும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார்.
ஆக, பாபாவும் நாஸ்ட்ரடாமஸும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்களானாலும், 2025ஆம் ஆண்டைக் குறித்து ஒரேவிதமாக கணித்துள்ளதால், அவர்களது கருத்துக்களைப் பின்பற்றுவோர் வியப்படைந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |