TVS முதல் Honda வரை.., சிறந்த Mileage தரும் 5 பைக் மொடல்கள் என்னென்ன?
இந்திய சந்தையில் அதிக மைலேஜ் (Mileage) தரும் ஐந்து பைக் மொடல்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஹோண்டா (Honda)
ஹோண்டா நிறுவனத்தின் CD 110 Dream Deluxe பைக்கில் ESP தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பைக்கிற்கு 7 ஆண்டுகள் வாரன்டி உள்ளது.
இது ஒரு லிட்டருக்கு 65 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. இதன் விலையானது ஷோரூம் செலவை தவிர ரூ.74,401 -ல் இருந்து தொடங்குகிறது.
பஜாஜ் (Bajaj)
இந்தியாவின் CNG வாயு மூலம் இயங்கும் முதல் பைக் மொடல் தான் பஜாஜ் Freedom 125. இதன் விலை ரூ.90,000 முதல் ரூ.1.09 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CNG மற்றும் பெட்ரோல் வசதிகள் கொண்ட இதன் மைலேஜ் 65 kmpl ஆகும்.
ஹீரோ (Hero)
ஹீரோ நிறுவனத்தின் Splendor Plus பைக்கின் விலை ரூ.74,441 முதல் ரூ.78,286 வரை உள்ளது. இதன் எஞ்சின் 100cc மற்றும் i3 தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் மைலேஜ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 80.6 கி.மீ ஆகும்.
டிவிஎஸ் (TVS)
டிவிஎஸ் நிறுவனத்தின் Star City Plus பைக்கின் விலை ரூ.75,541 முதல் ரூ.78,541 ஆக உள்ளது. இந்த பைக்கின் மைலேஜ் 86 கி.மீ ஆகும்.
பஜாஜ்
பஜாஜ் நிறுவனத்தின் Platina 110 பைக்கின் விலை ரூ.71,354 ஆக உள்ளது. இது, 70 kmpl மைலேஜ் தருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |