முருங்கைக் காயை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Health Benifits
Health Info
Drumsticks
By Balakumar
முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. முருங்கைக்காயில் இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. அந்தவகையில் தற்போது முருங்கை சாப்பிடுவதனால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதை பார்ப்போம்.
- முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும்.
- முருங்கைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
- கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பிரசவத்துக்கு பின்பு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முருங்கைக்காய் நீக்குகிறது.
- பசியை அதிகரிக்க உதவுகிறது. முருங்கைக்காயை சூப் செய்து குடித்தால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும்.
- முருங்கைக்காயை வேக வைத்து அதில் வருகிற ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
- முருங்கைக்காய் சாற்றை முகத்தில் தடவினால் முகம் பொலிவுப்பெறும். அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர முகத்தில் மினுமினுப்பு அதிகரிக்கும்.
- ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.
- முருங்கைக்காய் தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
- முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.
- வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US