பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா? ஆய்வில் வெளியான முக்கிய தகவல்
கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை வருடங்களாக உலகம் முழுவதும் தாக்கி வருகின்றது. இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.
பல்வேறு நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க நோய் தடுப்பு மையம் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ரோசெல்லா வெலன்ஸ்கி கூறியது, கொரோனா இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டவருக்கு எந்த மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட்டதோ அதே மாதிரியான லேசான பக்கவிளைவுகள் இருக்கும்.
71% பேருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி இருந்துள்ளது. 56% பேருக்கு சோர்வாகவும் 43% பேருக்கு தலைவலியும் ஏற்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 0.1% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி வருகின்றன.