முதலில் கோழி வந்ததா முட்டை வந்ததா? கிடைத்து பதில்!
முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? என்பது உலகெங்கிலும் உள்ள அனுபவமிக்க அறிஞர்களையும் குழப்பத்தில் வைத்திருந்த கேள்வியாகும்.
ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்துள்ள பதில்
சிலர் முட்டை என்று சொல்கிறார்கள், சிலர் கோழி என்று சொல்கிறார்கள். உண்மையில் முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதில் இதோ.
பிரித்தானியாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகளாக நம்மைத் தொந்தரவு செய்து வந்த இந்தக் கேள்விக்கான விடை கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
Credit: DAVID MALAN/GETTY IMAGES
இந்த முடிவு 51 புதைபடிவ இனங்கள் மற்றும் 29 உயிரினங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது, அவை முட்டையிடும் உயிரினங்கள் (Oviparity) அல்லது விவிபாரஸ் (குட்டி போடும் உயிரினங்கள்) என வகைப்படுத்தலாம்.
ஆய்வு என்ன சொல்கிறது?
முட்டையிடும் உயிரினங்கள் கடினமான அல்லது மென்மையான ஓடுகள் கொண்ட முட்டைகளை இடுவதற்குப் பெயர் பெற்றவை என்றாலும், விவிபாரஸ் இனங்கள் குட்டிகளாகவே பிறக்கின்றன.
இது இரண்டும் சேர்ந்த கலவைப்போல, அம்னியோட்கள் (amniotes) எனும் முட்டை இடகூடிய முதுகெலும்பு கொண்ட உயிரிங்கள் உயிர்வாழ்வதற்கு கடினமான ஓடுகள் கொண்ட முட்டைகள் முக்கியமானவை என்று தற்போதுள்ள கண்டுபிடிப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.
Photo Credit Z. Luk/Shutterstock
பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி, இப்போது இருக்கும் ஊர்வன, பரப்பன மற்றும் பாலூட்டிகளின் ஆரம்பகால மூதாதையர்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக குட்டிகளைப் பெற்றெடுத்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் எர்த் சயின்சஸ் தலைமையிலான ஆராய்ச்சியானது, 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது.
ஆய்வின்படி, பாலூட்டிகள், லெபிடோசவுரியா (பல்லிகள் மற்றும் பிற ஊர்வன) மற்றும் ஆர்க்கோசௌரியா (டைனோசர்கள், முதலைகள், பறவைகள்) உட்பட அம்னியோட்டாவின் அனைத்து வகுப்புகளும் விவிபாரஸ் மற்றும் அவற்றின் உடலில் கருவைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன.
கடின ஓடு கொண்ட முட்டையானது பெரும்பாலும் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான படியாகும் மற்றும் இறுதியில் கருவைப் பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
எளிமையான பதில்- முதலில் கோழி தான் வந்துள்ளது
அதாவது எளிமையாக சொல்லப்போனால், குட்டிகளை ஈன்றுகொண்டிருந்த சில விலங்குகள் பரிணாம வளர்ச்சியில், முட்டைகளை போடும் உயிரினங்களாக பல மில்லியன் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன.
utahstyleanddesign
எனவே, முதலில் முட்டை வரவில்லை, கோழி தான் வந்துள்ளது. எளிமையாக விளக்குவதானால், முதலில் குட்டிகளை போட்டுக்கொண்டிருந்த கோழியின் மூதாதைய உயிரினம் பரிணாம வளர்ச்சியில் முட்டை போடும் கோழிகளாக மாறின. அவை இப்போது முட்டை போட்டு குஞ்சு பொரிக்கின்றன.
முதலில் மென்மையாக இருந்த முட்டை ஓடுகள் பரிணாம வளர்ச்சியில் கடினமான ஆடுகளாக மாறியுள்ளன.
Which is First Egg or Chicken?, Egg or Hen, Egg or Chicken, Egg or Chicken first