இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
இதயத்தின் பகுதிகளுக்குக் இரத்தஓட்டம் தடைப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய உடற் பயிற்சி இல்லாத காரணத்தினால் தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு வருகின்றன.
மாரடைப்பு ஏற்படும் முன் உடலில் தோன்றும் சில அறிகுறிகளை உணர்ந்து முன்கூட்டியே போதுமான மருத்துவ வசதி எடுத்துக்கொண்டு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கலாம்.
அந்தவகையில், இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
என்ன காரணம்?
மோசமான உணவு- பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக இருக்கிறது. அவை இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி இதய நோய் ஆபத்துகளை அதிகரிக்கின்றது.
உடல் செயல்பாடு- உடல் செயல்பாடுகள் இல்லாதது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய் ஆபத்துக்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
மது மற்றும் புகைப்பழக்கம்- புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் ரத்தக் குழாய்களைச் சேதப்படுத்துகின்றன. அதனால் இதய நோய்கள் அதிகமாக வருகின்றன.
மன அழுத்தம்- குடும்பத்தில் உள்ள அழுத்தங்கள், பொருளாதார ரீதியான அழுத்தங்கள் போன்ற மன அழுத்தம் தான் மிக முக்கியமாக மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
பிற காரணங்கள்- இதை தவிர மரபணு காரணிகள், சுற்றுச்சூழல் காரணிகள், மருத்துவ நிலைகள், கோவிட் போன்ற தொற்றுக்களால் மாரடைப்பு உண்டாகின்றன.
மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க சமச்சீர் உணவு, தினசரி உடற்பயிற்சி, மன அழுத்தத்தை நிர்வகித்தல், புகைப்பழக்கத்தை தவிர்த்தல், மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமாக மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |