ட்ரம்பின் வரிவிதிப்பு: விலை உயரும் என பயந்து அமெரிக்கர்கள் அவசர அவசரமாக வாங்கும் பொருட்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உலகையே கட்டுப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு பல நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், உண்மை என்னவென்றால், அவரது மக்களும், அதாவது, அமெரிக்க மக்களும் அவரது வரி விதிப்பால் பாதிக்கப்படப்போகிறார்கள்.
காரணம், ட்ரம்ப், மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிறார். அதாவது, அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அவர் கூடுதல் வரி விதிக்கிறார்.
அப்படியானால், அந்த வரிச்சுமை யாரை பாதிக்கும்? அமெரிக்கர்களையும்தானே பாதிக்கும்!
ஆக, அவர்கள் வெளிநாட்டு பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்கவேண்டும், அது முழுமையாக சாத்தியமில்லை. அல்லது, கூடுதல் விலை கொடுத்து பொருட்களை வாங்கவேண்டும்.
விலை உயரும் என பயந்து...
அதற்கேற்றாற்போல, விலை உயரக்கூடும் என கருதப்படும் பொருட்களை அமெரிக்கர்கள் வாங்க விரைவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
அவர்கள் அவசர அவசரமாக வாங்கும் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
லாப்டாப், ஸ்மார்ட்போன்கள் முதலான மின்னணு உபகரணங்கள்.
ஃப்ரிட்ஜ், வாஷின் மெஷின், டிஷ் வாஷர் மற்றும் மைக்ரோவேவ் அவன் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள்.
கார்கள் மற்றும் மின்சார வாகனங்கள்.
சோஃபா, கட்டில், டைனிங் டேபிள் போன்ற வீட்டு உபயோக சாமான்கள்.
உடைகள், குறிப்பாக ஜீன்ஸ், காலணிகள், குறிப்பாக ஸ்போர்ட்ஸ்வேர் மற்றும் கேஷுவல் ஷூக்கள்.
குழந்தைகளுக்கான டயப்பர்கள், உடைகள் மற்றும் தள்ளுவண்டிகள். மரக்கட்டை, டைல்ஸ் போன்ற கட்டுமானப் பொருட்கள்.
இறக்குமதி செய்யப்படும் காஃபி, ஸ்னாக்ஸ், உணவுக்கு சுவையூட்டும் பொருட்கள் மற்றும் சர்வதேச மளிகைப்பொருட்கள்.
ட்ரெட்மில் போன்ற ஃபிட்னஸ் கருவிகள்.
கடைசியாக, சமையலறைக்குத் தேவையான மிக்சி, டோஸ்டர், ஏர் ஃப்ரையர், எஸ்ப்ரெஸ்ஸோ இயந்திரங்கள் ஆகியவற்றை அவசர அவசரமாக மக்கள் வாங்கிச் செல்வதாக கடைக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |