அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும்? இரண்டாம் உலகப்போரில் உயிர் தப்பிய பெண்ணின் எச்சரிக்கை
அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும் என யாருக்கும் தெரியவில்லை என்கிறார், இரண்டாம் உலகப்போரின்போது அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பிய பெண்ணொருவர்.
இரண்டாம் உலகப்போரில் உயிர் தப்பிய பெண்ணின் எச்சரிக்கை
உக்ரைன் ஊடுருவலாகத் துவங்கிய போர், இன்று எப்போது மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் என்ற அச்சத்தை உலகம் முழுவதிலும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஆளாளுக்கு அணு ஆயுதம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும் என யாருக்கும் தெரியவில்லை என்கிறார், இரண்டாம் உலகப்போரின்போது அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பிய மசாகோ வாடா (Masako Wada, 81) என்னும் பெண்.
இரண்டாம் உலகப்போரின்போது, நாகசாகியிலுள்ள மசாகோவின் வீட்டின் அருகே அமெரிக்கா வீசிய அணுகுண்டு விழுந்து வெடித்தபோது, மசாகோவுக்கு வயது இரண்டு கூட ஆகவில்லை.
அணுகுண்டு வீசப்பட்டதால் ஏற்பட்ட வடுக்களையும், மனதளவில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளையும் நினைவுகூரும் மசாகோ, அணுகுண்டு வீசப்பட்டால் என்ன ஆகும், அணுகுண்டு வீசப்பட்டபோது என்ன நடந்தது என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியாது என்கிறார்.
இந்த இரண்டு இடங்களுக்கு பாதிப்பு
இஸ்ரேலும் ஈரானும் ஒரு பக்கமும், ரஷ்யாவும் உக்ரைனும் மற்றொரு பக்கமும் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலிடமும் அணுகுண்டுகள் உள்ளன, ரஷ்யாவிடமும் அணுகுண்டுகள் உள்ளது குறித்து எச்சரிக்கிறார் மசாகோ.
ஆக, அணுகுண்டு வீசப்பட்டால், உக்ரைனும், மத்திய கிழக்கு நாடுகளும் பாதிக்கப்படும் என்கிறார் மசாகோ.
Nuclear Non-Proliferation Treaty என்னும் அமைப்புடன் தொடர்புடையவரான மசாகோ, நாங்கள் அமைதிக்காகவும், அணு ஆயுதங்கள் ஒழிப்புக்காகவும் குரல் கொடுக்கிறோம், அமைதி, ஆயுதங்கள் மூலம் அல்ல, பேச்சுவார்த்தைகள் மூலமே கிடைக்கும் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |