டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு முன் நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு, கோவை மாவட்ட டிஐஜி விஜயகுமார் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஐஜி தற்கொலை
தமிழ்நாட்டை சேர்ந்த இவர் கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
பின்னர் சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக இருந்த நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கோவை மாவட்ட சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விசாரணையில் தெரிந்தது என்ன?
டிஐஜியின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் இல்லையென்றும் , மனஅழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முன் நடந்தது என்ன?
கோவை சரக டிஐஜி விஜயகுமார் வழக்கமாக எப்போதும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அதே போல் இன்று காலையும் 5 மணிக்கு வாக்கிங் சென்றுள்ளார். வாக்கிங் சென்ற இடத்தில் சக அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.
பின்பு, வாக்கிங் முடித்துவிட்டு காலை 6 மணிக்கு தனது முகாம் அலுவலகத்திற்கு வந்துள்ளார். முதலில் குளித்து விட்டு கேம்ப் ஆஃபிஸ் வந்துள்ளார். பின்பு, அங்குள்ள மெய் பாதுகாவலர் ரவி என்பவரிடம் துப்பாக்கியை கேட்டுள்ளார். உயர் அதிகாரி என்பதால் துப்பாக்கியை ரவி கொடுத்துள்ளார்.
அப்போதே, அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், டிஐஜி விஜயகுமார் அங்கும் இங்கும் நடந்துள்ளார். இதனையடுத்து, தனது அறைக்கு சென்று தாழ்ப்பாள் போட்டுள்ளார். சில நிமிடங்களில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது.
இதன் பின்னர் பொலிசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். விஜயகுமார் உடல் மட்டும் தனியே கிடந்துள்ளது. பின்னர், அவரை கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |