ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
தேநீரின் சுவை பலரையும் அடிமையாக்கியுள்ளது. தேநீர் குடிப்பதனால் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
அந்தவகையில், ஒரு நாளைக்கு அதிக அளவில் டீ குடிப்பது நிச்சயமாக நம் உடலில் நாள்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஒரு மாதத்திற்கு டீ குடிக்காமல் இருந்தால் நம் உடலில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
நமது உடலில் காஃபைன் உட்கொள்ளல் குறைகிறது. இதன் காரணமாக நமக்கு ஆழ்ந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட தூக்கம் கிடைப்பதோடு பதட்டம் குறைகிறது.
டீ குடிப்பதை கைவிடுவது டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவும்.
டீ குடிப்பதை விடுவது நமது செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைப்பதால் செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒரு சில வகையான புற்று நோய்கள் தடுக்கப்படுகிறது.
ஏற்படும் பக்கவிளைவுகள்
ஒட்டுமொத்தமாக டீ குடிப்பதை நிறுத்தியவுடன் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
டீ குடிப்பதை விட்டவுடன் சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் உண்டாகலாம்.
உடலானது தேநீர் இல்லாமல் இருப்பதற்கு தன்னை பழகிக் கொண்டவுடன் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
மேலும், டீக்கு பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |