QR குறியீடு என்றால் என்ன? விரிவான விளக்கம்.. அவசியம் தெரிஞ்சிகோங்க
Bar Code தொழில் நுட்பம் போன்ற மற்றுமொரு தொழில் நுட்பமே QR Code. Quick Response என்பதன் சுருக்கத்தையே QRகுறிக்கின்றது.
இத் தொழில் நுட்பம் ஜப்பானில் பரவலாகப் பயன் பாட்டிலுள்ளது QR Code தொழில் நுட்பத்தில் ஒரு படத்தினுள் தகவல்கள் மறைக் குறியாக்கம் (encode) செய்ய்யப் படுகின்றன.
இந்த QR Code இல் இணையதள முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கங்கள் மற்றும் குறுஞ் செய்திகள் போன்றவறை மறைக்குறியாக்கம் செய்யலாம்.
மறைக் குறியாக்கம் செய்யப் பட்ட தகவல்களைக் கொண்ட இப்படத்தினை இனையம் வழியே பகிரலாம் அல்லது அதனை அச்சிட்டு வன் பிரதியாகவும் (hard copy) பயன்படுத்தலாம்.
QR கோடை உருவாக்குவதற்கென மென்பொருள்களும் உள்ளன. அவற்றை இலவசமாகவே இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் மென்பொருள்கள் எதனையும் கணினியில் நிறுவாமலேயே ஓன்லைனிலும் QR கோடை உருவாக்கும் வசதியை பல இனைய தளங்கள் வழங்குகின்றன.
அவற்றின் மூலம் இலகுவாக உங்கள் விருப்பத்திற்கேட்ப QR Code படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.