ட்ரம்ப் வலியுறுத்தியும் ஏற்க மறுத்த பாகிஸ்தான் - ஆபிரஹாம் உடன்படிக்கை என்றால் என்ன?
ஆபிரஹாம் உடன்படிக்கையை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் நிபந்தனை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் அரபு நாடுகள் ஆபிரஹாம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆபிரஹாம் உடன்படிக்கையை(Abraham Accords) கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் மீண்டும் போர் சூழலை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "தனிப்பட்ட முறையில், நமது அடிப்படைக் கொள்கைகளுடன் முரண்படும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் நாம் இணைய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

ஒரு நாள் கூட வார்த்தையை நம்ப முடியாத அந்த மக்களுடன் நீங்கள் எப்படி அமர்ந்து பேசுவீர்கள்? இஸ்ரேலை ஒரு நாடாக பாஸ்போர்ட்டில் கூட குறிப்பிடாத ஒரே நாடு நாம் மட்டும்தான்.
இதனை ஏற்க முடியாது என்பதில் நாம் தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம் கொண்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
ஆபிரஹாம் உடன்படிக்கை என்றால் என்ன?
1948 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை ஆதரித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போது, அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை.
1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதனை தனிநாடாக அங்கீகரித்தன.

2020 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப்பின் மத்யஸ்தத்தின் கீழ் ஐக்கிய அரபு ஆமீரகம் மற்றும் பஹ்ரைன் இந்த இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்து அதனுடன் அரபு நாடுகள் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதே ஆபிரஹாம் உடன்படிக்கை என அழைக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |