கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது என்ன?; தெரியாதவர்களுக்காக சில அடிப்படை தகவல்கள்...
எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, சில பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களின் மூலம் கனடாவின் தொழிலாளர் காலியிடங்களை நிரப்புவதற்காக, கனேடிய நிரந்தர வாழிட விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்காக கனேடிய அரசு பயன்படுத்தும் ஒரு அமைப்பாகும்.
எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, மூன்று கனேடிய புலம்பெயர்தல் திட்டங்களுக்கான விண்ணப்ப மேலாண்மை அமைப்பாகும்.
அவையாவன: கனேடிய அனுபவ வகுப்பு,
பெடரல் திறன்மிகு பணியாளர்கள் திட்டம் மற்றும்
பெடரல் திறன்மிகு வர்த்தக திட்டம்.
எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டமானது, விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்களை (profiles) தரவரிசைப்படுத்தும், Comprehensive Ranking System (CRS) என்னும் புள்ளிகள் அடிப்படையிலான ஒரு திட்டத்தைப் பயன்படுத்துகிறது. அதிக புள்ளிகள் பெறுவோர், விண்ணப்பிப்பதற்கான அழைப்பு ஒன்றைப் பெறுவார்கள் (ITA). அதைத் தொடர்ந்து அவர்கள் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.
அடுத்ததாக, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் அலுவலர் ஒருவர் அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து முடிவெடுப்பார். அதைத் தொடர்ந்து, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கைரேகை முதலான விடயங்களைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்வதுடன், நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யலாம், அல்லது, மேலதிக ஆவணங்களைக் கேட்கலாம்.
உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதென்றால், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அதை உறுதி செய்யும் விதத்தில் Confirmation of Permanent Residence (COPR) என்னும் ஆவணத்தை ஒன்றை உங்களுக்கு வழங்கும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர வாழிட உரிம விண்ணப்பதாரர்கள் landing processஐ முடிக்கலாம். நீங்கள் கனடாவுக்கு வெளியில் இருந்தால், கனடாவில் குடியமர்வதற்கான முதல் படிகளைத் துவங்குவதற்காக, நுழைவுக்கு முந்தைய சேவைகளை ( pre-arrival services) துவக்கலாம்.
கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிநிலை என்ன?
கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிநிலை, நீங்கள் எந்த பெடரல் பொருளாதார திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைப் பொருத்ததாகும்.
பொதுவாக கூறினால், பல்கலைக்கழக பட்டப்படிப்பு, திறன்மிகுப் பணி அனுபவம் மற்றும் ஓரளவு ஆங்கிலப்புலமை ஆகியவை கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகளாகும்.