டிரெண்டாகும் Flying Naked விமான பயணம் - நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தி விமானத்தில் பறப்பது எப்படி?
விமான பயணம் செய்பவர்களிடையே Flying Naked என்ற நடைமுறை பரவலாகி வருகிறது.
Flying Naked
வழக்கமாக விமானம் பயணம் என்பது பயண கட்டணம் மற்றும் லக்கேஜ் கட்டணம் என அதிக செலவு கொண்டது.
பயண நேரம் குறைவாக இருந்தாலும், Check-in, பயணத்திற்கு பின்னர் லக்கேஜ் எடுப்பது போன்றவற்றிற்கு காத்திருக்க வேண்டும்.
[1ZZR7CW
இந்த Flying Naked முறை, இது போன்ற அனாவசிய காத்திருப்புகளை தவிர்த்து நேரத்தை சேமிப்பதோடு, மிக குறைந்த அளவிலான லக்கேஜ் உடன் செல்வதால் தேவையற்ற கட்டணங்களையும் குறைக்கிறது.
Flying Naked என்பது, வழக்கமான அதிகளவிலான உடைமைகளை எடுத்து செல்லாமல், அத்தியாவசிய தேவைகளான செல்போன், மொபைல் சார்ஜர் போன்றவற்றை மட்டும் சிறிய அளவிலான கைப்பையில் கொண்டு செல்வதாகும்.
இதன் மூலம் உடைமைகளை பேக்கிங் செய்வது, விமான நிலையத்தில் லக்கேஜ் செக்இன் செய்வது, பயணத்திற்கு பின்னர் லக்கேஜ்ஜை எடுக்க காத்திருப்பது போன்ற நேரவிரயங்களை தவிர்க்கலாம்.
சிலர் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக லக்கேஜ் கொண்டு செல்வதுண்டு.இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
2023 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளவில் விமான நிறுவனங்கள் லக்கேஜ் கட்டணங்கள் மூலம் 33 பில்லியன் டொலர் வசூலித்துள்ளன. Flying Naked முறை மூலம், இந்த கட்டணங்களையும் பயணிகள் தவிர்க்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |