நிறைவான குழந்தை வளர்ப்பு என்றால் என்ன? தற்போதைய சூழ்நிலையில் ஏன் இது முக்கியத்துவம் பெறுகின்றது?
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இன்றைய நவீன காலத்தில் பல பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளை கவனிக்க கூட நேரமில்லாமல் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுக்காக ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவை குழந்தையின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தினை செலுத்துவதாக அமைகின்றது.
இந்நிலையில் ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’என்றால் என்ன? தற்போதைய சூழ்நிலையில் ஏன் இது முக்கியத்துவம் பெறுகின்றது? என்பது குறித்து பேபி ஷெரமி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான தனுஷ்கா சில்வா நேர்காணல் ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார். தற்போது அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
1.நிறைவான குழந்தை வளர்ப்பு என்றால் என்ன? மற்றும் தற்போதைய சூழ்நிலையில் ஏன் இது முக்கியத்துவம் பெறுகின்றது?
“ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு முழு கிராமம் தேவை” என்ற புகழ்பெற்ற ஆங்கில முதுமொழியானது இன்றைய காலகட்டத்திற்கும் சிறந்தமுறையில் பொருந்துகின்றது.
எனினும் கிராமங்களுக்கே உரிய பிணைப்புமிக்க வாழ்க்கை முறையானது தற்போது முற்றிலுமாக மாறியுள்ளது. முன்னைய காலத்தில் புதிதாய் பெற்றோராக மாறிய தம்பதியினருக்கு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் குழந்தை பராமரிப்பில் உதவியாகவிருந்து ஊக்கமளித்தனர்.
இருப்பினும், சமூகத்தின் பரிணாம வளர்ச்சியால் கூட்டுக்குடும்ப அலகுகள் தனிக் குடும்ப அலகுகளாக உருமாறியுள்ளன, இதன் காரணத்தால் குழந்தை வளர்ப்பில் தற்போதைய பெற்றோர் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர்.
மறுபுறம், சமகாலத்தில் வாழ்க்கை எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் என்பனவற்றை நோக்கி முன்னேறும் பெண்கள், தொழில் துறையில் பங்கெடுத்து தமது பொருளாதார நிலமையினையும் மாற்றி வரும் அதேவேளை, சிலர் வீட்டை அடிப்படையாகக் கொண்ட தொழில் முனைவோர்களாகவும் களமிறங்கியுள்ளனர்.
எனவே, குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும், குடும்பத்தாரோடு நேரத்தை செலவிடுவதும் கடினமாக மாறியுள்ளது. இவற்றின் காரணத்தால், பெற்றோர் குழந்தை பராமரிப்பில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக, பசி ஏற்படும் போதும், வேறு தேவைகளின் போதும் குழந்தையை பராமரிப்பதில் தாய் தனித்து செயற்பட வேண்டியிருப்பதால் தான் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் பங்கெடுக்கும் நிறைவான குழந்தை வளர்ப்பு முறையானது முக்கியத்துவம் பெறுகின்றது.
முதல் மூன்று வருடங்களில் குழந்தையின் மூளை வளர்ச்சி வேகமாக அபிவிருத்தியடைவதுடன், இவையே குழந்தையின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் உடல் மற்றும் மனோநிலையின் அடித்தளங்களாகவும் அமைகிறது.
எனவே, உங்கள் குழந்தை பிறந்ததிலிருந்து முதல் மூன்று வருடங்கள் முக்கியத்துவமிக்கது. அக்கால கட்டத்தில் குழந்தை மீது முறையான வகையில் அவதானம் செலுத்தாமலிருப்பது குழந்தையின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தினை செலுத்தும்.
தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரின் பங்களிப்பும் இந்த சிறிய பூக்கள் அழகாக மலர்வதற்கான சரியான அடித்தளத்தினை அமைக்க உதவுகிறது. இங்கு குழந்தையைப் பராமரிப்பவர் பெரும்பாலும் தாயாக இருப்பதை நாம் அவதானிக்கும் அதேவேளை தந்தை நிதி சார் பங்களிப்பினையே வழங்குகின்றார்.
தந்தை ‘வருமானம் ஈட்டுபவர்’ என்கின்ற சராசரி சிந்தனையிலிருந்து விடுபட்டு, தாயுடன் இணைந்து தமது குழந்தையை வளர்ப்பதில் பங்களிப்பு செய்ய முன் வரவேண்டுமென்பது முக்கியமானதாகும். இது குழந்தைக்கு மட்டுமன்றி, பெற்றோருக்கும் பாரியளவில் நன்மையளிக்கும்.
பெற்றோரின் வகிபாகங்களான தந்தை - வருமானம் ஈட்டுபவர், தாய் - பராமரிப்பவர் என்கின்ற சராசரி சிந்தனைகளிலிருந்து நாம் விடுபட வேண்டிய நேரம் இதுவாகும். குழந்தை வளர்ப்பில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் ஒன்றிணைந்து பங்கெடுக்கும் போது குழந்தைகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றார்கள் என்பதில் சந்தேகமில்லை.
எனினும், சில சந்தர்ப்பங்களில் தாய் அல்லது தந்தை என ஒருவர் குழந்தையைப் பராமரிப்பது மற்றும் பெற்றோர் அல்லாத நிலையினையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு வர்த்தகநாமம் என்கின்ற வகையில், தனி ஒருவராக மற்றும் பாதுகாவலராக நிறைவான குழந்தை வளர்ப்பு முறையில் குழந்தைகளை பராமரிக்கும் அனைவருக்கும் எமது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
2. பேபி ஷெரமி பல தலைமுறைகளாக நம்பிகைக்குரிய குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமாக திகழ்ந்து வருகின்றது. நிறைவான குழந்தை வளர்ப்பினை இலங்கை பெற்றோரிடையே கொண்டு சேர்ப்பதில் நீங்கள் எவ்வாறான வகிபாகத்தினை மேற்கொண்டுள்ளீர்கள்?
உண்மையில், ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக இலங்கையின் சிறந்த வர்த்தகநாமமான பேபி ஷெரமி இலங்கைப் பெற்றோரின் நாடித்துடிப்பினையும், அவர்கள் எம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் நன்கு புரிந்து வைத்திருக்கிறோம்.
எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் உயர்தர குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் உறுதிப்பாட்டுடன் இருப்பதுடன், குழந்தை வளர்ப்புப் பயணத்தில் நம்பகமான பங்காளராக எங்களின் வகிபாகத்தினை மேம்படுத்துவதிலும் நாம் சம அக்கறை கொண்டுள்ளோம்.
நிறைவான குழந்தை வளர்ப்பு தொடர்பில் மேலதிக விழிப்புணர்வை உருவாக்க வேண்டுமென்பதை நான் நம்புவதுடன், இலங்கையைப் பொறுத்தவரையில் குழந்தை வளர்ப்பின் ஆரம்ப காலகட்டத்தில் தந்தையின் பங்கை ஊக்குவிக்க வேண்டும்.
தந்தையர்கள் தாய்மார்களைப் போன்று குழந்தையைப் பராமரிக்க முடியாது என்று கூறக்கூடிய தற்போதைய நடைமுறைச் சமூக விதிமுறைகள் மற்றும் தந்தை வருமான ஈட்டுபவர், தாய் பராமரிப்பவர் போன்ற பின்தங்கிய சிந்தனைகளே இவற்றுக்கான பிரதான காரணிகளாகும்.
சமூக ரீதியாக திணிக்கப்பட்ட இந்த சராசரி சிந்தனைகளை நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதுடன் முழுமையான குழந்தை வளர்ப்பினை நோக்கி நகரும் நவீன குழந்தை வளர்ப்பு முறை எவ்வளவு தூரம் நடைமுறைக்குரியது என்பதனையும் நாம் ஆராய வேண்டும்.
இந்த அடிப்படையில் பெற்றோரைப் பழக்கப்படுத்துவதற்கும், அன்றாட வாழ்க்கையில் அவற்றை பின்பற்றுவதனையும் ஊக்குவிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.
3. இந்த விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், இலங்கையில் நிலைமை என்ன? இந்த எண்ணக்கரு குறித்த குடும்பங்களின் நிலை யாது?
நிறைவான குழந்தை வளர்ப்பு குறித்து இலங்கையில் அதிகளவில் பேசப்படாத போதிலும், பேபி ஷெரமியுடன் இணைந்து Kantar Sri Lanka நடாத்திய ஓர் ஆராய்ச்சியானது இலங்கை பெற்றோர்கள் எந்த அளவிற்கு நிறைவான குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.
தாயார் பிரதான பராமரிப்பாளராகவும், தந்தை பிரதானமாக நிதியியல் ரீதியில் பங்களிப்பினை வழங்குவதாகவும் பெரும்பான்மையானோர் இன்றளவும் நம்புவதாக இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகின்றது.
இது இலங்கையின் சமூக விதிமுறைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும். இருப்பினும், ஆராய்ச்சியின் முக்கியமானதோர் சாதக முடிவு யாதெனில், 64% பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் தந்தையும் தாயுடன் இணைந்து சம பங்கு வகிக்க வேண்டும் என்று உறுதியாக ஏற்றுக்கொண்டமையாகும்.
எனினும், தந்தைகள் வெவ்வேறு காரணங்களுக்காக இதில் ஈடுபடுவதில்லை, உண்மையில் 33% தந்தைகள் மாத்திரமே குழந்தை வளர்ப்பில் பங்கெடுக்க வேண்டும் என்பதனை நம்புகின்றனர்.
தாயானவர் குழந்தையை பேணி வளர்ப்பதில் முக்கிய வகிபாகத்தை ஆற்றவேண்டும் என இன்றளவும் சிந்திப்பினும், தந்தையர் தமது பிள்ளைகளை பராமரிக்க எண்ணுவது சிறப்பானதாகும். ஆனால், நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறையில் உள்ள சமூக நிலைப்பாடுகள் இதற்கான தடைகளாக காணப்படுகின்றன.
எவ்வாறாயினும், பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் இருவரும் சமமாக பங்களிக்க வேண்டும் என்பதனை முழுமையாக நம்புவதுடன், இது இலங்கையின் நிறைவான குழந்தை வளர்ப்பு முறையினை அபிவிருத்தி செய்வதனை ஊக்குவிக்கின்றது.
4. நிறைவான குழந்தை வளர்ப்பு பிள்ளைகளின் நலனில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?
ஒரு குழந்தையின் மூளையின் 80% ஆனது முதல் மூன்று ஆண்டுகளில் அபிவிருத்தியடைவதாக விஞ்ஞானம் எமக்கு கூறுகின்றது. பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் எப்படிப் பேசுகிறார்கள், தினசரி வேலைகளில் தந்தை எவ்வளவு உதவியாக இருக்கிறார் போன்ற தமது பெற்றோரின் நடத்தைகளை குழந்தைகள் அவதானிப்பதுடன், அவர்களின் மூளை ஒவ்வொரு சிறிய விவரங்களையும் விரைவாகப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டதாகவிருக்கிறது.
குழந்தையுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவதுடன், விளையாடுவதையும், ஆராய்ந்து கற்றுக்கொள்ளவும் கூடிய ஒரு நேர்மறையான மற்றும் அன்பான வீட்டுச் சூழலை உருவாக்கி மகத்தான பங்களிப்பினை வழங்க முடியும். தந்தை குழந்தையுடன் நேரத்தை செலவிடவும், குழந்தையுடன் பேசவும், உணர்வுபூர்வமாக இணைந்திருக்கும் போது, அது குழந்தையின் அபிவிருத்தியில் பலவிதமான நன்மைகளை வழங்கும்.
இன்று பெற்றோருக்கு நேரம் பற்றாக்குறையாக காணப்படுகின்ற போதிலும், இது அவர்களுக்கு கிடைக்கும் குறுகிய காலத்தினையும் அர்த்தமுள்ளதாக செலவிடுவது பற்றியதாகும்.
தாய் அல்லது தந்தை என ஒருவர் / பாதுகாவலர் அல்லது பெற்றோர் இருவரினதும் பங்களிப்புடனான ஒரு நேர்மறையான சூழல் குழந்தைகளுக்கு அறிவாற்றல்; செயற்பாடுகளை ஆரம்பித்தல், மொழிகள், சுய விழிப்புணர்வு, அடுத்தவரின் உணர்வினை புரிந்துகொள்ளல், கருணை மற்றும் பல ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள அனுமதிப்பதுடன், அவை நீண்ட காலத்தில் அவர்களுக்கு நன்மையளிக்குமெனவும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
5. பல குடும்பங்களின் தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் நிறைவான குழந்தை வளர்ப்பையும் அதற்கான பொருத்தமான தேவையையும் குடும்பங்கள் எவ்வாறு நன்கு புரிந்து கொள்ள முடியும்?
பெரும்பாலான குடும்பங்கள் இப்போது தனிக் குடும்பங்களாக இருப்பதால், அவர்கள் அனைத்தையும் நிர்வகிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதனால், நிறைவான குழந்தை வளர்ப்பு முறையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து கொள்கின்றனர்.
ஆராய்ச்சி முடிவுகள், தந்தையர்களும் அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்துள்ளார்கள் என்கின்ற நம்பிக்கையினை எமக்கு வழங்குவதுடன், அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். தந்தையர் தமது தொழிலில் அதிக நேரத்தை செலவிட வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர் என்பது உண்மையாகும்.
ஆனால், தற்போதைய சூழலில் குழந்தைகளுக்காக குறைந்தபட்ச நேரத்தையாவது முதலீடு செய்ய வேண்டியுள்ளதுடன், மிக முக்கியமாக வீட்டை மகிழ்ச்சியான வசிப்பிடமாக மாற்ற வேண்டிய தேவையுள்ளது.
மகிழ்விக்கும் செயற்பாடுகளில் குழந்தையுடன் விளையாடுதல், குழந்தையை இயற்கைப்
பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்தல், கதை கூறல் மற்றும் கிடைக்கும் நேரத்தை அர்த்தமுள்ள முறையில்
பயன்படுத்துவதன் மூலமும் ஒரு தந்தை குழந்தையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முடியும்.
6. குறிப்பாக மிலேனியல் பெற்றோருடன் நீங்கள் என்ன செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள்?
வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையுடன் முதல் முதல் மூன்று வருடங்களை குழந்தை வளர்ப்பில் செலவிடுவது மிகவும் கடினமானது என்பதை தனிப்பட்ட முறையில் பெற்றோர் என்கின்ற வகையில் நானும் அறிவேன்.
எனினும், அவையே பல்துறை தேர்ச்சி பெற்ற உணர்வுசார் நுண்ணறிவுடன் கூடியவர்களாக அவர்களை உருவாக்க வழிவகுக்கும் குழந்தைகளின் பொன்னான நாட்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
பணிச் சுமையைப் பகிர்வதன் மூலம் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் பணியாற்றி,
இருவரும் குழந்தையுடன் நேரத்தைச் செலவிட்டு குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்து குழந்தையின்
வளர்ச்சிக்கு குடும்பத்தை ஒரு சாதகமான இடமாக மாற்றினால் உணர்வுரீதியாக ஆரோக்கியமான,
புத்திசாதுர்யமான நல்ல குடிமகனாக உங்கள் குழந்தை வளர்வதற்கான விலைமதிப்பற்ற பயணத்துக்கு
வலுவான அடித்தளமாக அமையும்.