பொங்கல் பொங்குவது போல் செல்வமும் பொங்கும்.., இந்த நேரத்தில் செய்தால் போதும்!
பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம்.
இவ்வருடத்திற்கான தை பிறப்பு நாளை 14 ஆம் திகதியன்று பிறக்கவிருக்கிறது.
பொங்கல் என்றாலே பொதுவாக அனைவரும் சூரிய பொங்கல் வைப்பதே அதிகம்.
அந்தவகையில் எந்நேரத்தில் வீட்டில் பொங்கல் பொங்கலாம் எனவும் எப்படி பொங்கலாம் எனவும் பார்க்கலாம்.
பொங்கலை எந்நேரத்தில் வைக்கலாம்?
பொங்கலை நேரம் பார்த்து வைப்பது வழக்கம். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து மற்ற நேரங்களில் பொங்கல் வைக்கலாம்.
நீங்கள் சூரிய பொங்கலாக வைப்பதாக இருந்தால் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வைத்துவிடலாம். சூரிய உதயத்தின் போது அந்த பொங்கலை நைவேத்யம் செய்துவிடலாம்.
அந்த நேரத்தில் வைப்பது கடினம் என்றால் காலை 6 மணி முதல் 8.50 மணிக்குள் பொங்கல் வைத்து படையல் போடலாம்.
இன்னொரு நேரம் 10.35 மணி முதல் 12 மணிக்குள்ளாகவும் பொங்கல் வைத்து படைக்கலாம்.
பூஜைக்கு வைக்க வேண்டிய பொருட்கள்
சர்க்கரை பொங்கல், கரும்பு ஆகியவற்றுடன் கல் உப்பு, துவரம் பருப்பு, வெல்லம், பச்சரிசி அல்லது நெல் வைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் பொங்கினால் வீட்டில் செல்வம் பெருகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |