அணு ஆயுத தாக்குதல் நடந்தாலும் உலகில் உயிர் வாழும் சிறிய உயிரினம் எது தெரியுமா?
அணு ஆயுத தாக்குதலையும் எதிர்கொண்டு உலகில் உயிர் வாழும் உயிரினம் எது என்பதை பார்க்கலாம்.
எந்த உயிரினம்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதல் தற்போது தான் குறைந்துள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
அதேபோல, காசா – இஸ்ரேல், உக்ரைன் – ரஷ்யா என போர்கள் நடந்து வருகின்றன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மக்களும் அதிகளவில் இறந்து போகின்றனர். மேலும், உணவு தட்டுப்பாடும் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

ரூ.1000 கோடி இழப்பு.., பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்ததால் துருக்கி ஆப்பிளை புறக்கணித்த இந்திய வியாபாரிகள்
இந்த உலகமானது அணு ஆயுத போரை ஏற்கனவே சந்தித்துள்ளது. உலகப் போர் இரண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு ஆயுதம் கொண்டு தாக்கியது. இதனால் சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
ஆனால், அணு ஆயுத தாக்குதல் நடந்தாலும் உலகில் உயிர் வாழும் சிறிய உயிரினம் ஒன்று உள்ளது. அந்த உயிரினம் தான் கரப்பான் பூச்சி. இதனை அறிந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய தொடங்கினர்.
அந்த ஆய்வில் பொதுவாக மனிதர்களால் 800 ரேடுகள் அளவிலான கதிர்வீச்சை தாங்க முடியும் என்பது தெரியவந்தது, ஆனால், ஒரு கரப்பான் பூச்சி சுமார் 10,000 ரேடுகள் வரையிலான கதிர்வீச்சை தாங்கும் திறன் கொண்டுள்ளது.
இதற்கு மனிதர் மற்றும் கரப்பான் பூச்சிக்கு இடையே உள்ள செல் பிரிவு விகிதங்களில் உள்ள வேறுபாடு தான் காரணம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |