முட்டை மஞ்சள் கரு சாப்பிடலாமா? கூடாதா? அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவை
Egg yolk is good or bad: பொதுவாக, பலருக்கும் முட்டையில் இருக்கக்கூடிய மஞ்சள் கரு பிடிப்பதில்லை. அதில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் என்று அதை தவிர்க்கின்றனர். ஆனால் உண்மையில் முட்டை மஞ்சள் கொழுப்பு சத்து அதிகம் இருக்கிறதா? என்பதை பற்றி பார்ப்போம்.
கடந்து சில தினங்களாக மக்கள் மத்தியில் ஆரோக்கியம் தொடர்பான ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், முட்டை சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது காலை உணவு புரதம் இருக்க வேண்டியதன் அவசியம் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் கூட பலரும் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட மறுக்கின்றனர்.

காரணம் முட்டையின் மஞ்சள் கரு என்பது கொழுப்பு சத்து அதிகம் நிறைந்த பகுதி என்ற காரணமாகவே அவர்கள் தவிர்க்கின்றனர். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று பலருக்கும் தெரிவதில்லை. உண்மையில் முட்டையின் மஞ்சள் கருவில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் கோலின் ஆகியவை உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆதலால், எல்லோரும் முட்டையின் மஞ்சள் கருவை தூக்கி எறிய வேண்டும் என்பதில்லை. மேலும், நாம் சாப்பிட வேண்டிய முழு முட்டை அல்லது வெள்ளை கருக்கலின் எண்ணிக்கை இவையெல்லாம் நம்முடைய ஒட்டுமொத்த உணவு முறை கலோரி தேவைகள் மற்றும் தனிப்பட்ட உடல் நிலையாகிவை பொறுத்து அமையக்கூடியது.
உங்களுடைய மருத்துவர் உடல் நல காரணத்திற்காக குறிப்பிட்ட சில உணவு முறையை உங்களுக்கு பரிந்துரைத்தால் அதற்கு ஏற்ப முட்டைகளும் மஞ்சள் கருவையும் எடுத்துக் கொள்வது சிறந்தது. மேலும், நல்ல ஆரோக்கியமான ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு முட்டை மஞ்சள் கருவுகளை கட்டாயமாக பயமின்றி எடுத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தாலும் அது ஆரோக்கியமான மனிதர்களின் ரத்த கொலஸ்ட்ரால் அளவை நேரடியாக பாதிப்பு இல்லை என்று மருத்துவ ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கிறார்கள்.
அதோடு, நம்முடைய உடலுக்கு தேவையான வைட்டமின் டி ,பி 12, ஏ இரும்புச்சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்கு உகந்த கோலின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இந்த மஞ்சள் கருவில் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், ஒரு சிலர் இப்பொழுது உடற்பயிற்சிக்காக ஜிம் செல்லக்கூடியவராக இருந்தால் அவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று முழு முட்டைகள் வரை மஞ்சள் கருடன் சேர்த்து சாப்பிடலாம்.
நீங்கள் இன்னும் கூடுதலாக முட்டை சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவின் எண்ணிக்கையை ஒன்று அல்லது இரண்டாக கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் சொல்லப்படுகிறது.
ஆகையால், புரத தேவைக்காக ஒன்று அல்லது மூன்று முட்டை சாப்பிடுபவர்கள் எனில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை, அச்சம் இல்லாமல் கட்டாயமாக சாப்பிடலாம் உங்களுக்கு ஏதேனும் குழப்பம் பயம் இருந்தால் மருத்துவரை ஆலோசித்து பிறகு அவர்களுடைய அறிவுரையின்படி எடுத்துக் கொள்ளலாம்.