உலகிலேயே விலை மலிவான Passport எந்த நாட்டுடையது?
உலகிலேயே விலை மலிவான பாஸ்போர்ட் என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் பெற்றுள்ளது.
உலகிலேயே விலை மலிவான பாஸ்போர்ட்
உலகிலேயே விலை மலிவான பாஸ்போர்ட், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட்தான். ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட்டைப் பெற, 17.70 டொலர்கள் செலவு செய்தால் போதும். அதாவது, இலங்கை மதிப்பில் 5,252 ரூபாய்.
உலகிலேயே விலை மலிவான பாஸ்போர்ட் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு இந்தியா. இந்திய பாஸ்போர்ட்டைப் பெற, 18.07 டொலர்கள் செலவு செய்தால் போதும். அதாவது, இலங்கை மதிப்பில் 5,362ரூபாய்.
உலகிலேயே அதிக செலவு பிடிக்கும் பாஸ்போர்ட்
உலகிலேயே அதிக செலவு பிடிக்கும் பாஸ்போர்ட், அமெரிக்க பாஸ்போர்ட்டாகத்தான் இருக்கும் என பலரும் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் உலகிலேயே அதிக செலவு பிடிக்கும் பாஸ்போர்ட் மெக்சிகோவின் பாஸ்போர்ட்தான். அந்நாட்டின் பாஸ்போர்ட்டைப் பெற 231.05 டொலர்கள் செலவு செய்யவேண்டும். அதாவது, இலங்கை மதிப்பில் 68,560 ரூபாய்.
மெக்சிகோவைத் தொடர்ந்து அதிக செலவு பிடிக்கும் பாஸ்போர்ட் அவுஸ்திரேலிய பாஸ்போர்ட் ஆகும். அந்நாட்டின் பாஸ்போர்ட்டைப் பெற 225.78 டொலர்கள் செலவு செய்யவேண்டும். அதாவது, இலங்கை மதிப்பில் 66,997 ரூபாய்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |