நிலவின் ஈர்ப்பு சக்தி எத்தகையது?
பூமியுடன் ஒப்பிடும்போது சந்திரனின் ஈர்ப்பு விசை பலவீனமானது.
ஈர்ப்பு விசை என்பது இடம்( space- time)மற்றும் நேரத்தின் வளைவு ஆகும்.
அதனால் அதிக நிறை கொண்ட பொருள்கள் அதிக ஈர்ப்பு விசை கொண்டவை.கனமான நிறை கொண்ட பொருள் பிரபஞ்சத்தின் தாளில் அதிகமாக வளைந்திருக்கும்.
இந்த புகைப்படத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்,பூமியானது பிரபஞ்சத்தின் தாளில் சந்திரனை விட அதிகமாக வளைந்துள்ளது
புவியீர்ப்பு ஒரு பொருளின் அளவு மற்றும் பொருள்களுக்கு இடையிலான தூரத்தால் பாதிக்கப்படுகிறது. ஒரு பொருளின் நிறை அதிகரிக்கும் போது ஈர்ப்பு விசையும் அதிகரிக்கிறது.
இருப்பினும், பூமியின் தற்போதைய நாள் -நீளம், நிலையான பருவங்கள் மற்றும் கடல் அலைகளுக்கு சந்திரனின் ஈர்ப்பு விசையே காரணமாகும்.
சந்திரன் ஒளியை உற்பத்தி செய்வதில்லை. சூரியனின் ஒளியைப் பிரதிபலிப்பதால் அது "பிரகாசிக்கிறது".
நிலவின் ஈர்ப்பு விசை பூமியை விட 6 மடங்கு குறைவு .
நீங்கள் நிலவில் உங்கள் உயரத்திற்கு ஜாலியாக குதிக்கலாம்.