இந்தியாவின் தேசிய ஸ்வீட் எது? சுவாரஸ்ய தகவல் உள்ளே
இந்தியாவின் தேசிய இனிப்பு எது என்பது பலருக்கும் தெரியாத தகவலாக தான் இருக்கும். இதனை பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.
தேசிய ஸ்வீட்
பொதுவாகவே பண்டிகை காலங்கள் என்றாலே வீடுகளில் இனிப்புகள் தான் நிரம்பி வழியும். ஆனால், இந்தியாவின் தேசிய இனிப்பு என்று கேட்டால் பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும்.
இந்தியாவுக்கு தேசிய விளையாட்டு, தேசிய விலங்கு, தேசிய காய்கறி, தேசிய மலர், தேசிய பழம் என்று இருக்கின்ற மாதிரியே தேசிய இனிப்பும் உள்ளது.
நமது நாட்டில் கொண்டாட்டங்கள் என்றாலே இனிப்புகள் தான். எத்தனையோ சுவையான இனிப்புகள் நம் நாட்டில் உள்ளன.
இந்தியாவின் தேசிய இனிப்பு ஜிலேபி ஆகும். நீங்கள் இந்த இனிப்பை அதிகமாக சாப்பிட்டிருப்பீர்கள். இது இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் காலை உணவுடன் சேர்ந்து கொடுப்பது வழக்கமாகும்.
இதனை ஒவ்வொரு பகுதிகளிலும் ஜலேபி அல்லது ஜிலிபி என்று கூறுகின்றனர். இது ஒரு ஈரானிய இனிப்பு என்றும் கூறப்படுகிறது.
ஆனால், பல பண்டைய சமஸ்கிருத நூல்களில் ஜிலேபி குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்க முடியும். மேலும், இந்த இனிப்பை 'குண்டலிகா' அல்லது 'ஜல்வல்லிகா' என்றும் குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |